ரசாயனப் பயன்பாடும், அதிகரிக்கும் கேன்சரும்!

cancer
cancer

நாம் பரவலாக பயன்படுத்தும் ரசாயனப் பொருட்களால், ஆண்களை விட பெண்களுக்கு அதிக பாதிப்புகள் இருக்கும் என்றும், குறிப்பாக பெண்களுக்கு கருப்பை மற்றும் பல வகையான புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சேகரித்த தரவுகளை பயன்படுத்தி செய்யப்பட்ட ஆய்வில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. இந்த தரவுகள் 2005-2018 வரை பயோ மானிட்டரிங் என்ற திட்டம் மூலம் சேகரிக்கப்பட்டதாகும். இதற்காக பத்தாயிரத்திற்கும் அதிகமான தரவுகளின் அடிப்படையில் ஆய்வுகள் செய்யப்பட்டது. இத்தகைய ரசாயனப் பொருட்களை பயன்படுத்தும்போது, பெண்களின் ஹார்மோன் செயல்பாடு சீர்குலைந்து புற்றுநோய் ஏற்படுத்தும் காரணியாக மாறுகிறது. 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பேக்கேஜிங் மற்றும் மவுத்வாஷ் உள்ளிட்ட வீட்டுப் பொருட்களில் இருக்கும் ரசாயனக் கலவைகள், பெண்களை அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக துப்புரவு பொருட்கள், வண்ணப்பூச்சுகள், துணிகள், கரைகளைப் போக்கும் ரசாயனங்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ரசாயனத் தயாரிப்புகளில் PFAS என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இவை ஒரு குறிப்பிட்ட சூழலில் நீண்ட காலம் இருப்பதால் 'ஃபாரெவர் கெமிக்கல்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. 

இப்போது வரும் பெரும்பாலான பொருட்களில் இந்த ரசாயனம் இருக்கிறது. இவற்றை தவிர்ப்பது சாத்தியமற்றது என்ற சூழ்நிலையில், 97% அமெரிக்கர்களின் ரத்தத்தில் PFAS இருப்பதாகத் தெரியவந்துள்ளது. எனவே மக்கள் இதுதொடர்பான விழிப்புணர்வைப் பெறுவது கட்டாயமாகும். இந்த Forever Chemical-களால் புற்றுநோய் கட்டாயம் ஏற்படும் என்பது நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த சமீபத்திய ஆய்வினால் புற்றுநோயை ஏற்படுத்தும் பங்கு இதற்கு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

எனவே இதுகுறித்து மேலும் பல ஆய்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com