கோடி பலன் தரும் கொய்யா இலைகளின் எட்டுப் பயன்கள்!

கோடி பலன் தரும் கொய்யா இலைகளின் எட்டுப் பயன்கள்!
SRIRAMKANNA.P

* கொய்யா இலையின் சாற்றைப் பிழிந்து அதனுடன் சர்க்கரை அல்லது கற்கண்டு, தேன் கலந்து சாப்பிட, செரிமான கோளாறுகள் அனைத்தும் தீரும்.

* கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் பல்வலி, ஈறு பிரச்னை, வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றை அது குணப்படுத்தும்.

* கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ செய்து, 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பட்டு நீரிழிவு நோய் குணமாகும்.

* கொய்யா இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு இயற்கையான மருந்தாகக் கருதப்படுகிறது. ஏனெனில், கொய்யா இலைச் சாறு இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

* கொய்யா இலை டீ, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

* கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு சிறிது தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடலில் உள்ள ஊளைச் சதை குறைவதோடு, உடல் எடை குறைவதையும் உணரலாம்.

* கொய்யா இலைகள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கும் வல்லமை கொண்டது. இதய கோளாறுகள், காய்ச்சல், தொடர் இருமல், சளி தொல்லை போன்ற அனைத்துக்கும் இது நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

* கொய்யா இலை கஷாயம் இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது. மேலும், தைராய்டு சுரப்பையும் சமநிலைப்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com