மழைக்கால சருமப் பிரச்னைகளிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

மழைக்கால சருமப் பிரச்னைகளிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

னிதர்களுக்கு மழைக்காலங்களில் சளி, காய்ச்சல் வருவது போல சிலவிதமான சரும நோய்களும் தாக்கக்கூடும். இதுபோன்ற நோய்த்தொற்று வராமல் எவ்வாறு நம்மை நாம் தற்காத்துக்கொள்வது என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. எப்போதும் உலர்ந்த, சுத்தமான ஆடைகளையே அணிய வேண்டும். மழையில் நனைந்து விட்டால் உடனே ஈரமான உடைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

2.  உள்ளாடைகளை தினமும் துவைத்து நன்றாக வெயிலில் படும்படி உலர வைக்க வேண்டும். பாலியஸ்டர் போன்றவற்றை விட, பருத்தித்  துணிகளை உடுத்தினால், சருமத்தில் வியர்வை நிற்பது தடுக்கப்பட்டு, துணியால் உறிஞ்சப்படும். இதனால் சருமப் பிரச்னைகள் மற்றும் எரிச்சல் தவிர்க்கப்படும்.

3.  தினமும் குளிப்பது அவசியம். குளித்து முடித்ததும் உடலை ஈரம் போக நன்றாகத் துவட்டவும். தோல் மடிப்புகளில், முழங்காலின் பின்புறம் உள்ள பகுதி, முழங்கை மடிப்பு, அக்குள் பகுதி, கால் விரல்கள், காது மடிப்பு, காதுகளின் பின்புறம், கழுத்து, முதுகு, தொடை இடுக்கு போன்றவற்றில் கண்டிப்பாக ஈரம் இருக்கக் கூடாது. இருந்தால் தேமல் வரக்கூடும்.

4. உங்களுடைய உடைகள், முக்கியமாக உள்ளாடைகள், டவல், சோப்பு, முகம் துடைக்கும் துண்டு இவற்றை பிறருடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

5. வெளியில் சென்றுவிட்டு வந்த பின்பு குளிப்பது நல்லது. கை, கால்கள், முகத்தை மட்டுமாவது சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

6. ஷூக்களில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். சாக்ஸ் அணியும் முன் கால் விரல்களுக்கு இடையில் டஸ்டிங் பவுடர் போட வேண்டும்.

7. மழைக்காலம் தொடங்கும் முன்பே மெத்தை, தலையணைகளை வெய்யிலில் காய வைத்து எடுக்க வேண்டும்.

8. மழைக்கால காற்றின் ஈரப்பதம் சருமத்தில் உள்ள ஈரத்தை உறிஞ்சிவிடும். எனவே, உடலுக்கு மென்மையான சோப்பை உபயோகிப்பது நல்லது.

9. வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் அவற்றிற்கு தகுந்த தடுப்பூசிகள் போட வேண்டும். நாய், பூனையுடன், விளையாடிய பின்பு கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்து கொள்வது அவசியம். மழைக்காலத்தின்போது அவற்றை  படுக்கையிலோ அல்லது மடியிலோ வைத்துக்கொள்ளக் கூடாது. செல்லப் பிராணிகளின் முடிகளை கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.

10. குழந்தைகளை கொசுக்கடியில் இருந்து பாதுகாக்க அவர்களின் கை மற்றும் கால்களை முழுக்க மூடியுள்ள உடைகளை அணிவிக்கவும்.  தோட்டத்திற்கு செல்லும் போது அவசியம் காலணிகள் அணிந்து செல்லவும். மழைக்காலத்தில் விஷ ஜந்துக்கள் கடிக்கக்கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com