பொழுதுபோக்கு மூலமாக மன அழுத்ததை குறைக்க எளிய வழிகள்!

பொழுதுபோக்கு மூலமாக மன அழுத்ததை குறைக்க எளிய வழிகள்!

சிறு வயதிலிருந்து வீட்டிலும் பள்ளியிலும் அதிக கேட்கப்பட்ட ஒரு கேள்வி “உங்கள் ஹாபி என்ன?”என்பதே. நாமும் செல்ஃப் இன்ட்ரோவுடன் சேர்த்து அதிகம் சொல்லப்பட்ட ஒரு விஷயம் என்றால் அதுவும் ஹாபிஸ்தான். பல பேர் பலவற்றை பொழுதுபோக்காக சொல்வார்கள். சிலருக்கு பாட்டு பாடுதல், நடனம் ஆடுதல்,வரைதல், புத்தகம் வாசித்தல், பாட்டு கேட்பது என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருக்கும்.

ஒருவர் தொடர்ச்சியாக ஒரு வேலை செய்யும்போதும், ஓய்வின்றி வேலை செய்யும்போதும் மூளை மிகவும் இறுக்கமாக மாறிவிடும். மிகவும் மன அழுத்தமாக இருப்பதுபோல் உணர்வீர்கள். அப்போதெல்லாம் ஒன்று அமைதியாக ஓய்வெடுப்பார்கள், இல்லையெனில் தூங்கி விடுவார்கள். இதன்மூலம் மன அழுத்தம் முழுவதுமாக போகுமா என்ன? இல்லை! அதனை மறந்து ஒரு சில மணி நேரம் நிம்மதியாக இருக்க முடியும்.

  • மன அழுத்ததை முழுவதுமாக போக்க வேண்டும் என்றால் உங்கள் பொழுதுபோக்குக்கென ஒரு மணி நேரத்தை செலவிடுங்கள். ஹாபிஸ் வைத்து மன அழுத்ததை போக்குவதற்கான சில வழிகளைப் பார்ப்போம்:

  • உங்கள் ஹாபி என்னவென்று முதலில் கண்டுபிடியுங்கள். நீங்கள் எந்த வேலை செய்தால் உங்களுக்கு சந்தோஷம் ஏற்படுகிறதோ அதுதான் உங்கள் ஹாபி.

  • உங்களுக்கு பிடித்த ஹாபியை செய்யும்போது மட்டும்தான் நீங்கள் அதனுடைய விளைவை பற்றி யோசிக்காமல் இருப்பீர்கள். அதை பற்றி யாராவது எதாவது சொல்லிவிடுவார்களோ என்று எந்த அச்சமும் தயக்கமும் இல்லாமல் செய்வீர்கள். அதுவே ஒரு மிக பெரிய நிம்மதியாக இருக்கும்.

  • ஹாபியை செய்யும்போது உங்களை அறியாமலே ஒரு ஆர்வத்துடன் அனுபவித்து செய்வீர்கள். அதுவும் ஒரு வகையான இன்பத்தை கொடுக்கும்.

  • வேலையில், வீட்டில் என ஏகப்பட்ட கஷ்டங்கள் ஒன்றாக வரும்போது அதை நினைத்துக்கொண்டே உட்காராமல் ஒரு மணிநேரம் ஒதுக்கி உங்கள் பொழுதுபோக்கினை செய்யுங்கள். அந்த ஒரு மணி நேரம் உங்கள் மனது அமைதியடைந்து அடுத்த கட்ட யோசனைகளை சுலபமாக எடுக்க உதவும்.

  • எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி உங்களுக்கென்று ஒரு நேரத்தை ஒதுக்கி, உங்களுக்கான நேரத்தை செலவிடுங்கள். பொழுதுப்போக்குதானே என்று அலட்சியமாக நினைத்துவிடாதீர்கள். உங்கள் மன உறுதியையும் நிம்மதியையும் பேனிக்காக்கும் ஒரு கருவியே இந்த பொழுதுப்போக்குகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com