இலைக் காய்கறிகளையும் பாலக்கீரையும் மழைக்காலத்தில் சாப்பிடக் கூடாது: ஏன் தெரியுமா?

இலைக் காய்கறிகளையும் பாலக்கீரையும் மழைக்காலத்தில் சாப்பிடக் கூடாது: ஏன் தெரியுமா?

பொதுவாகவே கீரை வகைகள் உடலுக்கு ஊட்டமும் சக்தியும் தரக்கூடியவை. மழைக்காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகி, தொற்று நோய்கள் சுலபமாக நம்மைப் பீடித்துக்கொள்ளும். எனவே, சில வகைக் கீரைகளை மழைக்காலத்தில் உண்ணக்கூடாது.

சதுப்பு நிலப்பகுதிகளில் பயிரிடப்படுபவை கீரைகளும் காய்கறிகளும். அவற்றின் இலைகளில் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள், கிருமிகள் தொற்றும் வாய்ப்பு அதிகம். மழைக்காலங்களில் சூரிய ஒளி இல்லாததால் அவை  ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற  இலைக்காய்களில் தங்கி விடுகின்றன. என்னதான் நீரில் இவற்றைக் கழுவினாலும் முற்றிலுமாக இவற்றை சுத்தம் செய்துவிட முடியாது.

பாலக்கீரையில் இரும்புச்சத்து மிகுந்திருக்கிறது. இதை மழைக்காலத்தில் சாப்பிட்டால் குடல் இயக்கம் பாதிக்கப்பட்டு செரிமானப் பிரச்னை வரும். காலிஃபிளவர், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, போன்ற காய்கறிகளில் இலைகள் நெருக்கமாகப் பிணைந்துள்ளதால் மாசுபடுவதற்கான அபாயமும் அதிகமாக உள்ளது.

இயற்கையாகவே இவற்றில் உள்ள ஈரப்பதம், விரைவில் மழைக்கால பாக்டீரியா மற்றும் மைக்ரோ நுண்ணுயிர்களை ஈர்க்கும் தன்மை கொண்டவை. மேலும், இவை செரிமானத்திற்கு ஏற்றது அல்ல. அதன் குளிர்ச்சியும் நீர்த்தன்மையும் செரிமானத்தை பாதிக்கும். அதைப்போல, மழைக்காலத்தில் தக்காளியை மிக அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடைய புளிப்புத் தன்மை வயிற்றில் அமிலத்தை சுரக்கச் செய்யும்.

அதேசமயம், குளிர்ச்சித்தன்மை உடைய சுரைக்காய் மற்றும்  பீர்க்கங்காய் ஆகியவை  மழைக்காலத்தில் உண்ண ஏற்றவை என்கிறது ஆயுர்வேதம். இவை உடலின் சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகின்றன. இதில் உள்ள சத்துக்கள் செரிமானத்திற்கு நன்றாக உதவுகின்றன. மேலும், தோல் நோய்கள், இரத்த சோகையை போக்கும் தன்மையும் இவற்றுக்கு உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com