மாவிலை - மாம்பூ மகத்துவம்!

மாவிலை - மாம்பூ மகத்துவம்!

மாவிலைகள்

* மாவிலைகள் சிறுநீரகக் கற்களையும் பித்தப்பை கற்களையும் கரைக்கக் கூடியது.

* இதன் கொழுந்து இலைகளில் உள்ள, ‘டானின்’ என்ற மூலப்பொருளைக் கொண்டுதான் சர்க்கரை நோய்க்கு மருந்து தயாராகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இந்த இலைகளை காய வைத்து, தூள் செய்து டீ போட்டு குடிக்கலாம். அல்லது இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை இந்த நீரை வடிகட்டி அருந்தலாம். இதனால் உடலில் உள்ள நச்சுச் கழிவுகள் நீங்கி, வயிறு சுத்தமாகும்.

* நுரையீரல் உட்பட, உடல் உள்ளுறுப்புகளை பலப்படுத்துவதில் பெரும்பங்கு மாவிலைகளுக்கு உண்டு.

* ஏதாவது ஒரு விதத்தில் கொழுந்து இலைகளை சாப்பாட்டில் சேர்த்து வந்தாலே, உயர் ரத்த அழுத்தம் உட்பட பல பிரச்னைகள் நீங்கும்.

* சருமத்துக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு தரக்கூடிய மாவிலைகளை காயங்களுக்கு மருந்தாகவும் போடலாம். உடலில் நெருப்பு புண்கள் ஏற்பட்டு விட்டால் மாவிலையை எரித்து அதன் சாம்பலைத் தடவினால் எரிச்சல் தணியும்.

* குளிக்கும் நீரில் மாவிலையை போட்டு ஊற வைத்துக் குளிக்கலாம்.

* மாவிலைகளை நிழலில் காயவைத்து தூளாக்கி வைத்துக்கொண்டால், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளின்போது இந்தத் தூளை சாப்பிடலாம். இந்தத் தூளை இருமல், சளியால் அவதிப்படும்போதும் சாப்பிடலாம்.

மாம்பூக்கள்

* மாம்பூக்களிலும் இதேபோல மருத்துவ சக்திகள் அடங்கியுள்ளன. இதில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடெண்ட் உள்ளதால் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்து, நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது.

* வாய் புண்களுக்கு இந்த மாம்பூக்கள் தீர்வு தருகின்றன.  மாம்பூக்களை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் பல் வலி நீங்கும்; பல் ஈறுகளும் பலப்படும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு மாம்பூக்கள் பேருதவி புரிகின்றன. இன்சுலின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துவதில் பெரும்பங்கு மாம்பூக்களுக்கு உண்டு.

* மாம்பூக்களையும் பொடி செய்து வைத்துக்கொண்டால் பல உடற்கோளாறுகளை தீர்க்க உதவும்.

* மாம்பூக்களின் பொடியை மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும்.

* மாவிலையை தண்ணீரில் போட்டுவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிப்பதுபோலவே, மாம்பூக்களையும் பொடி செய்து வைத்துக்கொண்டு, காலை நேரத்தில் நீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை அளவு சீராக இருக்கும். குடல் பகுதிகள் பலப்படும்.

* வீட்டில் கொசு தொல்லை இருந்தால் மாம்பூக்களை நெருப்பிலிட்டால் அந்தப் புகைக்கு கொசுக்கள் அண்டாது.

* தலையில் நீர் கோர்த்துக் கொண்டால் அல்லது தலை பாரமாக இருந்தால் மாம்பூவை நெருப்பில் போட்டு அதன் புகையைப் பிடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com