பாலா? தயிரா? எது பெஸ்ட்?

பாலா? தயிரா? எது பெஸ்ட்?
Published on

யிர் குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியைத் தருவதும் தயிர்தான். தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனைவிட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய்க் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL.  இது ஜீரண சக்தியைத் தூண்டி வயிற்றின் உபாதைகளைச் சரிசெய்கிறது.

யிறு சரியில்லாதபொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள். அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கும்.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளைச் சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com