இரத்தத்தை சுத்திகரிக்கும் சுக்கான் கீரை!

sukkan keerai Benefits.
sukkan keerai Benefits.

ன்னதான் நாம் பல கீரை வகைகளை உணவுக்காகப் பயன்படுத்தினாலும், இன்னும் நமக்குத் தெரியாத ஆரோக்கிய நன்மைகள் தரும் பல கீரை வகைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துகொள்ளப்போகிறோம். இதைப் பற்றி இன்று நீங்கள் தெரிந்து கொண்டால், அவ்வளவு எளிதில் இந்த கீரை வேண்டாம் என விட்டு விட மாட்டீர்கள்.

இந்த கீரையை கொக்கான் கீரை, சுக்குக் கீரை என்றும் கூறுவார்கள். பொதுவாகவே கீரைகளில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாது. ஆனால் சுக்கான் கீரை நமது குடலையே முழுவதுமாக சுத்தப்படுத்தக் கூடியது. குடலில் உள்ள நச்சுக்கள் கழிவுகள் அனைத்தையும் எளிதில் வெளியேற்ற இது உதவுகிறது. அஜீரணத்தை போக்கி பசியைத் தூண்டும் தன்மை இந்த கீரைக்கு உண்டு.

வழக்கமான கீரைகளை நாம் எப்படி சமைக்கிறோமோ அதே போல இந்த கீரையையும் சமைத்து சாப்பிடலாம். அல்லது துவையல் போல செய்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். அல்சர் பிரச்னை இருப்பவர்கள் இந்த கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடும்போது அல்சர் விரைவில் குணமாகும். அல்லது வெங்காயம் பூண்டு கீரை அனைத்தையும் ஒன்றாக வதக்கி அரைத்து சட்னி போல சாப்பிடலாம். அஜீரண கோளாறு இருப்பவர்களுக்கு இந்த சட்னி நல்ல தீர்வைக் கொடுக்கும்.

இந்தக் கீரை நமது இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தை பாதுகாக்கக் கூடியது. இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதம். ஒருவரின் இரத்த அழுத்தம் சீராக இருந்தாலே அவர்களின் இதயம் பாதுகாப்பாக இருக்கும். அதன்படி உணவில் சுக்கான் கீரையை சேர்த்துக் கொண்டால் இரத்த அழுத்தப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அத்துடன் நமது இரத்தத்தையும் இது சுத்திகரிக்கிறது. 

அதேபோல சுக்கான் கீரையில் சூப் செய்து குடித்தால் கல்லீரல் பாதிப்புகள் சரியாகும். இந்தக் கீரை பித்தத்தை குறைத்து, கல்லீரலை பலப்படுத்தி மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இப்படி பல ஆரோக்கிய நன்மைகள் சுக்கான் கீரையில் நிறைந்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com