மனச்சோர்வுக்கு மருந்து சூரிய ஒளியில் இருக்கு!

மனச்சோர்வுக்கு மருந்து சூரிய ஒளியில் இருக்கு!

பொதுவாக, ‘மனச்சோர்வு’ என்கிற வார்த்தையை கிராமப்புறங்களில் இருப்பவர்கள் அவ்வளவாக உபயோகிப்பதில்லை. அதுமட்டுமின்றி, எளிதில் அவர்கள் மனச்சோர்வில் சிக்குவதுமில்லை. ஆனால், நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இந்த மனச்சோர்வு அதிகம். கிராமங்களில் மக்களின் வாழ்விடமும், வேலையும் இயற்கையோடு இணைந்திருக்கும். வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடும் அவர்களின் மனங்களில் எளிதில் சோர்வு நுழைவதில்லை. இயற்கையின் கொடையான சூரிய ஒளியில் எக்கச்சக்கமான நன்மைகள் இருக்கின்றன.

சூரிய ஒளி வைட்டமின் - டியை வாரி வழங்குவதோடு, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஹார்மோனான செரோடோனின் அளவை உயர்த்துகிறது. சூரிய ஒளியில் தினமும் 15 நிமிடங்கள் நின்றால் உடலில் செரோடோன் உற்பத்தி அதிகரிக்கச் செய்கிறது. இது மனச்சோர்வை விரட்டி, மனதை நிதானமாகவும் அமைதியாகவும் வைத்திருக்கும்.

நகரத்தில் அடுக்ககங்களில் கதவுகளையும் ஜன்னல்களையும் இறுக சார்த்தி விட்டு வீட்டுக்குள்ளேயே இருப்பதனால்தான் மனச்சோர்வு வருகிறது. மொட்டை மாடியிலோ அருகிலுள்ள பூங்காவிலோ காலையில் சிறிது நேரம் சூரிய ஒளி உடல் மீது படுமாறு நின்றால் மனச்சோர்வு ஓடிப்போகும். மேலும், வெயில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடையக்கூடிய மெல்லிய எலும்புகளை பலப்படுத்துகிறது. மூட்டுவலி வராமல் தடுக்கும் சக்தி வெயிலில் இருக்கிறது. அதுமட்டுமின்றி, உடலின் ஊளைச்சதையைக் கரைத்து, உடல் எடையை குறைக்க வெயில உதவுகிறது. ஆயுளை நீட்டித்து, நீண்ட காலம் வாழ உதவுகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள், இளங்காலை வெயிலில் சிறிது நேரம் நின்றால் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com