துன்பம் போக்கும் துத்திக் கீரை!

துன்பம் போக்கும் துத்திக் கீரை!

* துத்தி இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி மூலத்தில் கட்ட, மூலத்தில் உள்ள வீக்கம், வலி, குத்தல் மற்றும் எரிச்சல் ஆகியவை நீங்கும்.

* துத்தி இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து புண்களின் மீது தடவ, புண்கள் குணமாகும்.

* எலும்பு முறிவு ஏற்பட்டால், அந்த இடத்தில் இந்த இலையை நன்றாக அரைத்து மேலே கனமாகப் பூசி, அதன் மேல் துணியை சுற்றி அசையாமல் வைத்திருந்தால், வெகு விரைவில் முறிந்த எலும்பு கூடி குணமாகும்.

* துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க உடல் வலி குணமாகும்.

* துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்க, பல் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.

* பூஞ்சை நோய் காரணமாக தோலில் உண்டாகும் படர்தாமரை நோய்க்கு துத்தி இலையை அரைத்துப் பூச நன்கு குணம் தெரியும்.

* அல்சர் என்று சொல்லப்படுகின்ற குடல்புண் இருந்தால், இந்த துத்தி கீரையை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண்கள் முற்றிலும் ஆறும்.

* துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, வெள்ளை படுதல் குணமாகும்.

* துத்தி பூக்களை உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு தூள், ஒரு டம்பளர் பாலில் கலந்து இரவில் மட்டும் குடித்துவர, உடல் சூடு குணமாகும்.

* மூல நோய் உள்ளவர்கள் துத்திக் கீரையை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் இந்த நோயில் இருந்து விரைவில் குணம் பெறலாம்.

* துத்தி இலையையும் துத்தி பூவையும், சம அளவில் எடுத்து மை போன்று அரைத்து பருக்களின் மேல் போட்டு வந்தால் பருக்கள் விரைவில் மறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com