சதகுப்பையின் மருத்துவப் பயன்கள் என்ன?

சதகுப்பையின் மருத்துவப் பயன்கள் என்ன?

பார்ப்பதற்கு சீரக செடியை போல் தோற்றமளிக்கும் சதகுப்பை மருத்துவ குணங்கள் நிறைந்த செடி ஆகும். இதற்கு சோயிக்கீரை, மதுரிகை என பெயர்களும் உண்டு. மாதவிடாய் தோன்றும் காலங்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில், சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் வகைக்கு சம அளவாக  எடுத்து இடித்துப் பொடியாக்கி சம அளவு பனைவெல்லம் சேர்த்து அரைத்து 5 கிராம் காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து சோம்புக் குடிநீர் குடித்து வர, மாதவிடாய் கோளாறு, அதிகமான ரத்தபோக்கு நீங்கி கருப்பை பலப்படும்.

சதகுப்பை சூரணம் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர நுரையீரலிலுள்ள மாசுக்கள் நீங்கும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய மூலிகை சதகுப்பை.

சதகுப்பை இலையை விளக்கெண்ணெய் தடவி வதக்கி கட்டிகளுக்கும், வீக்கங்களுக்கும் வைத்துக் கட்டி வர சீக்கிரம் பழுத்து உடையும்.

பிரசவித்த பிறகு தாய்ப்பால் சுரப்புக் குறைவாக இருந்தால் சதகுப்பை, அமுக்குரா சூரணம் இரண்டையும் கலந்து சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

சதகுப்பை இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 15 கிராம் எடுத்து சிறிது சர்க்கரையுடன் கலந்து 3 வேளை சாப்பிட்டு வர சைனஸ், தலைவலி, காது வலி, பசி மந்தம்,  மூக்கு நீர்ப் பாய்தல் முதலியவை குணமாகும்.

காது மந்தம் உள்ளவர்கள் சரியான முறையில் சதகுப்பை இலை மற்றும் சதகுப்பை விதைகளைப் பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும்.

சதகுப்பை வாய் துர்நாற்றத்தைப் போக்கும். சுவை மண்டல கோளாறுகளையும் குணமாக்க வல்லது சதகுப்பை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com