பாத வெடிப்புக்கு உடனடி தீர்வு என்ன தெரியுமா?

பாத வெடிப்புக்கு உடனடி தீர்வு என்ன தெரியுமா?

பொதுவாகவே, நாம் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளுள் ஒன்று பாத வெடிப்பு. இதனை ஆரம்பத்திலேயே கவனித்து சரிசெய்துவிட்டால் எளிதில் பிரச்னை தீர்ந்துவிடும். இல்லாவிட்டால் தேவையில்லாமல் பிரச்னை பெரிதாகிவிடும்.

நம் உடலின் முழு பாரத்தையும் தாங்குவது பாதங்கள்தான். அந்த பாதங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டிது நமது கடமையாகும். பெரும்பாலும், பாதங்கள் சுத்தமாக இல்லாததன் காரணமாகவே  வெடிப்புகள் ஏற்படுகின்றன. பாதங்கள் தூய்மையாக இல்லாதபோது அதில் அழுக்குகள் தங்கிவிடுகின்றன. இதனால் பாதங்களில் பிளவுகள் உண்டாகி வலி ஏற்படுகிறது.

பாத வெடிப்பை நாம் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்த முடியும். இதற்காக மருந்து கடைகளில் ஆயின்மென்டுகள் விற்கப்படுகின்றன என்றாலும், இயற்கையான முறையில் இதனை குணப்படுத்த முடியும்.

சிறிதளவு வேப்பிலைக் கொழுந்துகள், அரை கப் கல் உப்பு மற்றும் மூன்று தேக்கரண்டி மஞ்சள் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்னர் அந்தத் தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி, வெதுவெதுப்பான சூட்டில் கால் பாதங்களை சுமார் 15 மிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் நல்ல துணியால் கால் பாதங்களை நன்கு துடைத்தெடுக்க வேண்டும்.

பின்னர் தேங்காய் எண்ணெய் சிறிதளவு கையில் எடுத்துக் கொண்டு பாதங்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் வெதுவெதுப்பான நீரில் கால்களை சுத்தப்படுத்துவது குதிகால் வெடிப்புக்கு சிறந்த தீர்வாகும்.

தினமும் வெளியில் சென்றுவிட்டு வந்தால் கால்களை சோப்பு போட்டு கழுவுங்கள். அப்படியே விட்டுவிடாதீர்கள். இதனால் கால்களில் அழுக்கு படிந்து அதுவே பாதங்களில் பிளவு ஏற்பட காரணமாகிவிடும். இவையெல்லாவற்றை விட முக்கியமானது வெளியில் போகும்போது செருப்பு அல்லது ஷு அணிந்து செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் குதிகால் வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com