வேப்பம் பூவின் ஆரோக்கியம் + அழகு நன்மைகள்!

வேப்பம் பூ
வேப்பம் பூ

கோடை வெயிலால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.அந்த பாதிப்புகள் உடலை தாக்காமல் இருக்க, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க வேண்டும். அந்த நோய் எதிர்ப்புச் சக்தியை வேப்பம்பூ தருகிறது‌. கிருமி நாசினியான வேப்பம் பூவில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

பித்தம் அதிகமானால் உண்டாகும் பெருமூச்சு, நா வறட்சி, சுவையின்மை, வாந்தி நாள்பட்ட வாதநோய்கள், ஏப்பம், வயிற்று புழு இவற்றை போக்கும் சக்தி வேப்பம் பூவிற்கு உள்ளது.

தோல் நோய்களுக்கும், வயிற்று உபாதைகளுக்கு ம் வேப்பம்பூ நிவாரணமாக நல்ல குணத்தைக் தருகிறது. வேப்பம்பூவை உலர்த்தி பொடித்து, அதை 1டீஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட வாய்க்கசப்பு, வாந்தி மற்றும் மயக்கம் ,தலைசுற்றல்  நீங்கும். வேப்பம்பூவை காய வைத்து 1டீஸ்பூன் அளவு எடுத்து சூடான நீரில் கலந்து குடிக்க வாதத்தால் உண்டாகும் உடல்வலி நீங்கும்.

கபத்தைக் குறைக்கும். புற்றுநோயை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. வயிற்றில் வாயு அதிகரிப்பதால் உண்டாகும் வயிற்று வலிக்கு 2டீஸ்பூன் பூவை வெயிலில் வெறுத்துப் பொடி செய்து சூடான கஞ்சியில் கலந்து சாப்பிட வேண்டும்.

தலையில் உண்டாகும் பொடுகுப் பிரச்னைகளை வேப்பம்பூ தீர்க்கிறது. 50மிலி தே எண்ணையில் ஒரு கைப்பிடி அளவு வேப்பம்பூவை இட்டு காய்ச்சி பூவுடன் தலைக்கு தேய்த்து குளிக்க, பொடுகு பிரச்சனை சரியாகும்.

பொடுகுப் பிரச்னை...
பொடுகுப் பிரச்னை...

குழந்தைகளுக்கு பூவை நெய்யில் வறுத்து பொடி செய்து சிறிது வெல்லம் சேர்த்து கொடுப்பது நல்லது  ‌இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

நம் சமையலில் வேப்பம்பூவிற்கு தனி இடம் உண்டு. வேப்பம் பூ பச்சடி, வேப்பம்பூ ரசம் என பலவிதமான பதார்த்தங்களில் சேர்த்து சமைப்பதால் சுவையோடு ஆரோக்யமும் மேம்படும் ‌கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, உடல் எரிச்சல், வயிற்று உபாதைகள் என அனைத்து வித நோய்களுக்கும் வேப்பம்பூ மருந்தாகிறது.

இதையும் படியுங்கள்:
பக்தர்களுக்காக அம்பாள் இருக்கும் பச்சை பட்டினி விரதம்!
வேப்பம் பூ

உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும். குடல் இயக்கத்தை சீராக்கி வளர் பருவத்தினரின் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

இவ்வாறு பல விதங்களில் பயன்படும் வேப்பம் பூவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com