தேங்காய்ப் பால்: ஆரோக்கியம் தரும் இயற்கை அமிர்தம்!

உணவுக்கு ருசி சேர்க்கும் தேங்காய்ப் பாலில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
coconut Milk
coconut Milk
Published on

உணவுக்கு ருசி சேர்ப்பது தேங்காய். தேங்காய்ப் பாலில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. அவற்றை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.

* ஆப்பம், இடியாப்பம் கொழுக்கட்டை போன்ற பதார்த்தங்களை தேங்காய்ப் பாலில் ஊற வைத்து சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும்.

* தேங்காயை நன்றாக மென்று அந்தப் பாலை நீண்ட நேரம் வாயில் வைத்திருந்தால் வாய்ப்புண் ஆறும்.

* முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருந்தால் தேங்காய் உடைத்த தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை துடைத்து வந்தால் முகத்தில் உள்ள தூசுகள், எண்ணெய்ப் பசை ஆகியவை அறவே நீங்கிவிடும்.

* இளநீரில் சிறிது சந்தனம் சேர்த்து கழுத்தில் தடவி வந்தால் வேர்க்குரு நீங்கும். நல்ல இதமாகவும் இருக்கும்.

* சிறிதளவு சீரகத்துடன், தேங்காய் பால் ஊற்றி அரைத்து கொப்பளங்கள் மீது போட்டு வர இரண்டு நாட்களில் கொப்புளங்கள் ஆறும்.

* தேங்காய் பாலுடன் நெய் சேர்த்து பின் நாட்டுக்கோழி முட்டையுடன், வெந்தயக்கீரையையும் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டால் ஒரே இடத்தில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் சோர்வோ மற்ற எந்த தொந்தரவும் இன்றி வேலை செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
கேசத்தின் அழகை அதிகரிக்கும் தேங்காய்ப் பால்....
coconut Milk

* மஞ்சள், கருஞ்சீரகம் இவைகளை இடித்து பொடி செய்து தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அடுப்பில் காய்ச்ச எண்ணெய் பதம் வரும். வந்ததும் இறக்கி ஆற வைத்து சொறி, படைகளின் மீது தடவி வர குணம் ஆகும்.

* தேங்காயில் பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தி ஏற்படும்.

* ஞாபக மறதிக்கு ஒரு பத்தை தேங்காயும் நாலு பாதாம் பருப்பையும் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com