Palm Jaggery with milk
Palm Jaggery with milk

பாலுடன் பனைவெல்லம் கலந்து அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Published on

னைவெல்லம் (Jaggery) என்பது பதப்படுத்தப்படாத கரும்புச் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும், இந்தியர்களின் ஒரு பாரம்பரிய இனிப்பூட்டியாகும். இதை பாலுடன் சேர்க்கும்போது பல ஆரோக்கிய நன்மைகள் உடலுக்குக் கிடைக்கின்றன. பனைவெல்லத்தை பாலுடன் சேர்த்துக் கலந்தால் ஊட்டச் சத்துக்களும் சுவையும் நிறைந்து, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் காக்கக்கூடிய ஒரு பானம் உருவாகும். இந்த பானத்திலிருந்து கிடைக்கக்கூடிய 5 வித ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. பனை வெல்லம், பால் இரண்டிலுமே அதிகளவு ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெல்லத்தில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. பாலில் கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின் D அதிகமுள்ளது. இவை இரண்டும் சேரும்போது ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் நிறைந்த பானமாகிறது.

2. வெல்லத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். தொடர்ந்து பனை வெல்லம் கலந்த பாலைக் குடித்து வந்தால் உடலுக்கு நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட சக்தி கிடைக்கும். உடலில் ஏற்படும் நோய்களும் விரைவில் குணமாகும்.

3. இரத்தத்தில் ஆரோக்கியம் நிறைந்திருக்க போதுமான அளவு இரும்புச் சத்து தேவை. தினமும் வெல்லப்பால் குடித்து வந்தால், குறைபாடு ஏதுமின்றி இரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெறும். அனீமியா நோய் உண்டாகும் வாய்ப்பும் தடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் காலூன்றக் காரணமான வந்தவாசிக் கோட்டை!
Palm Jaggery with milk

4. வெல்லத்தில் நச்சுக்களை நீக்க உதவும் குணமும் இருப்பதாகக் கருதப்படுகிறது. வெல்லம் சேர்த்த பாலைக்  குடித்து வந்தால் உடல் முழுவதும் உள்ள நச்சுக்கள் நீக்கப்பட்டு உடலின் மொத்த ஆரோக்கியமும் மேன்மையடையும்.

5. பாலில் கால்சியமும் வைட்டமின் D யும் அதிகமுள்ளன. இந்த இரண்டு சத்துக்களும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேன்மையடையச் செய்து ஆஸ்ட்டியோபொரோஸிஸ் நோய் வரும் அபாயத்தைத் தடுக்க உதவும்.

நம் உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச் சத்துக்களான கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்களின் அளவு குறையாமல் இருக்க பாலில் பனைவெல்லம் சேர்த்து அருந்துவோம்; நல்ல உடல் ஆரோக்கியம் பெறுவோம்!

logo
Kalki Online
kalkionline.com