'மூன் மில்க்' குடித்துவிட்டு படுக்கச் செல்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Health Benefits of 'Moon Milk'
Health Benefits of 'Moon Milk'
Published on

பொதுவாக, இரவு படுக்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான பால் குடிப்பது ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து, நல்ல தூக்கம் பெற உதவும் என்று பழங்காலம் முதலே கூறப்பட்டு வருகிறது. இந்தப் பாலில் அஸ்வகந்தா, பட்டை பவுடர், மஞ்சள், தேன், இஞ்சி, ஜாதிக்காய் பவுடர், மிளகு தூள் போன்ற மூலிகைகள் சேர்த்து தயாரித்து  ‘மூன் மில்க்’ (Moon Milk) என்று பெயரிட்டு குடிப்பது சமீப காலத்தில் பிரபலமாகியுள்ளது. இது உடல் சோர்வு, அயற்சி, ஸ்ட்ரெஸ் ஆகியவற்றை நீக்கி மூளையின் திறனை கூர்மையடையச் செய்கிறது. மூன் மில்க் குடிப்பதால் நம் மூளைக்கும் உடலுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறதென்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. இது நம் உடலில் சேர்ந்திருக்கும் நாள்பட்ட ஸ்ட்ரெஸ் மற்றும் கவலைகளைக் குறைக்க உதவும். அஸ்வகந்தாவை பாலில் சேர்ப்பதால் மூளை சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும். இன்சோம்னியா எனப்படும் தூக்கமற்ற நிலை மாறி இதம் தரும். அமைதியான தூக்கம் கண்களைத் தழுவும்.

2. மூன் மில்க்கில் சேர்க்கப்படும் மூலிகைகள், அதிகளவு ஸ்ட்ரெஸ் மற்றும் கம்ப்யூட்டர் அல்லது போன் ஸ்கிரீனில் நிறைய நேரத்தை செலவிட்டு தூக்கமின்மையால் அவதியுறும் இள வயதினருக்கு தரமான தூக்கம் கிடைக்க உதவுகின்றன. அஸ்வகந்தா, ஜாதிக்காய், பட்டை பவுடர் போன்ற மூலிகைகள் சேர்த்த வெதுவெதுப்பான இந்த மூன் மில்க் அருந்திவிட்டு படுக்கச் செல்வதால் மூளை ஆரோக்கியம் பெற்று அமைதியான ஆழ்ந்த உறக்கம் பெற உதவுகிறது.

3. மூன் மில்க்கில் சேர்க்கப்படும் மஞ்சள் தூள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் மேலும் ஒரு பாதுகாப்பு வளையமாய் நின்று செயல்புரியக் கூடியது. இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலுவடையும்; உடல் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும், உடலின் நோய்கள் விரைவில் குணமாகும். மேலும், மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் மூளையின் மீதுள்ள வீக்கங்கள் குறைய உதவுகின்றன. இச்செயலால் மூளையின் ஞாபக சக்தி மற்றும் அறிவாற்றல் மேன்மை பெறுவதுடன், மொத்த உடல் நலனும் சீராகிறது.

4. இஞ்சி மற்றும் பட்டைப் பவுடர் சேர்த்த மூன் மில்க் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்பாடுகளை சிறப்பாக்கி வயிற்றில் அஜீரணம், வாய்வு போன்ற கோளாறுகள் உண்டாகாமல் பாதுகாக்க உதவும். இந்தப் பாலில் சேர்க்கப்படும் மூலிகை மற்றும் ஸ்பைஸஸ்கள் இரைப்பை குடல் ஆரோக்கியம் பன் மடங்கு பலம் பெறவும் அவற்றின் இயக்கம் மென்மேலும் சிறப்படையவும் உதவி புரிகின்றன.

இதையும் படியுங்கள்:
பக்கவாதத்தை தவிர்க்க உதவும் சில தடுப்பு முறைகள்!
Health Benefits of 'Moon Milk'

5. இப்பாலில் உள்ள மஞ்சள் தூள் மற்றும் பட்டைப் பவுடர் மூளையின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தி அறிவாற்றல் மற்றும் ஞாபக சக்தி குறையாமல் பாதுகாக்க உதவுகின்றன. பல வகை நோய்கள் வராமல் தடுக்கவும் துணை புரிகின்றன.

மூன் மில்க் தயாரிக்கும் முறை:

ஒரு கப் பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் பட்டை பவுடர், கால் டீஸ்பூன் அஸ்வகந்தா, 2 சிட்டிகை ஏலக்காய் பவுடர், கால் டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட், ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பவுடர் சேர்க்கவும். பிறகு ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து, கட்டி விழாமல் அனைத்தையும் நன்கு கலந்து விடவும். பிறகு அதில் ஒரு டீஸ்பூன் வெர்ஜின் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் விட்டு கொதிக்க விடவும். அனைத்து ஸ்பைஸஸ்களின் சாறு பாலில் இறங்க சில நிமிடம் கொதிக்க விட்டு பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். பாலின் சூடு கொதி நிலையில் இருந்து வெதுவெதுப்பிற்கு இறங்கியதும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்துப் பருகவும். பாலின் சூடு கொதி நிலையில் இருக்கையில் தேன் சேர்ப்பதை கட்டாயம் தவிர்க்கவும். ஏனெனில், தேனின் குணமடையச் செய்யும் குணம் மாறி, தேன் நச்சுத்தன்மை அடையும் வாய்ப்பு உண்டாகும். சரியான பக்குவத்தில் மூன் மில்க் தயாரித்து அருந்துவது இடையூறில்லா தரமான தூக்கம் பெறவும், மன அழுத்தத்தை நீக்கவும் உதவும் மருந்தாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com