கசூரி மேத்தியில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!

Health Benefits of Kasuri Methi
Health Benefits of Kasuri Methihttps://www.herzindagi.com

சூரி மேத்தி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? வெந்தயம் என்பது நாம் சாம்பார், காரக்குழம்பு, ஊறுகாய் போன்ற நம் அன்றாட உணவுகளில் சேர்த்து உண்ணும் ஒரு மூலிகை விதை. இவ்விதைகளை முளைக்கச் செய்து அக்கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாகச் செய்து உண்ணலாம். அக்கீரையின் இலைகளை கிள்ளி எடுத்து சுத்தம் செய்து வெயிலிலோ, மைக்ரோ அவனிலோ பரத்தி நன்கு காய வைத்து எடுத்தால் அதுவே கசூரி மேத்தி. இதை டப்பாவில் சேமித்து, தேவைப்படும்போது எடுத்து நசுக்கி குழம்பு, கிரேவி வகைகளில் சேர்த்து சுவை மற்றும் வாசனை கூடுவதற்காகப் பயன்படுத்தலாம். கசூரி மேத்தியில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

கசூரி மேத்தியில் உள்ள நார்ச்சத்தானது ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவுகிறது; குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது; மலச்சிக்கலையும் நீக்க உதவி புரிகிறது. மேலும், அதிக நேரம் இது குடலில் தங்குவதால் பசியுணர்வு ஏற்படுவதில் கால தாமதம் ஆகிறது. இதனால் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறைகிறது; உடல் எடை அதிகரிக்காமல் சீராகப் பராமரிக்க முடிகிறது.

நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவுகிறது. இரத்தத்திலுள்ள அதிகப்படியான கொழுப்புகளைக் கரைக்க உதவிபுரிகிறது. வயிற்றிலுள்ள அமிலம் பின்னோக்கி உணவுக் குழாய்க்குள் பாய்வதைத் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்கி மணம் பெறச் செய்யும். சருமத்தில் ஏற்படும் கரைகள் மற்றும் சிறு தழும்புகளை மறையச் செய்கிறது.

கசூரி மேத்தியில் உள்ள ஒரு வகை கூட்டுப் பொருளானது ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, ஆர்த்ரைடிஸ் எனப்படும் கீல்வாத நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

இதையும் படியுங்கள்:
நோயாளிகளைப் பார்க்கும்போது சொல்லக்கூடாத விஷயங்கள் எவை தெரியுமா?
Health Benefits of Kasuri Methi

பாரம்பரிய மருத்துவத் தயாரிப்புகளில், சுவாச மண்டல உறுப்புகளில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும், ஆஸ்துமாவைக் குணப்படுத்தவும் வெந்தயம் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வெந்தயம், அதன் கீரை மற்றும் கசூரி மேத்தி ஆகியவற்றில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகளை கருத்தில் கொண்டு இவற்றை அடிக்கடி உணவுகளில் பயன்படுத்தி உடல் நலம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com