இதயத்தை காக்கும் ஆலிவ் எண்ணெயின் அற்புத நன்மைகள்!

Olive Oil
Olive Oil
Published on

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று நல்ல உணவுப் பழக்கம். உணவுப் பழக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது நாம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள். பலவிதமான எண்ணெய் வகைகள் இருந்தாலும் ஆலிவ் எண்ணெய் தனது தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக பலராலும் விரும்பப்படுகிறது. குறிப்பாக, இதய ஆரோக்கியத்திற்கு ஆலிவ் எண்ணெய் மிகவும் நன்மை பயக்கும். இந்தப் பதிவில் இதயத்தை காக்கும் ஆலிவ் எண்ணையின் அற்புத நன்மைகள் பற்றி விரிவாகக் காணலாம். 

ஆலிவ் எண்ணெயின் ஊட்டச்சத்துக்கள்: 

ஆலிவ் எண்ணெய் மோனோ அனுசாசுரேட்டட் கொழுப்புகள் நிறைந்தது. இந்த வகை கொழுப்புகள் ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், ஆலிவ் எண்ணெயில் விட்டமின் கே, இ மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன.‌ இவை உடலில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து செல்களை சேதமடைவதில் இருந்து பாதுகாக்கின்றன.‌

ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்: 

ஆலிவ் எண்ணெயை தவறாமல் உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதில் உள்ள ஒற்றை சர்க்கரை அமிலங்கள், ரத்த நாளங்களை விரிவுபடுத்தி ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கின்றன. இதனால், ரத்த அழுத்தம் குறையவும், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையவும் வழிவகுக்கிறது. 

ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இது மூளையின் செல்களை பாதுகாத்து அல்சைமர் நோய் மற்றும் பிற நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பைகா குறைக்கிறது. 

ஆலிவ் எண்ணெயில் உள்ள சில அமிலங்கள் பசி ஏற்படும் உணர்வை தணிக்கும் தன்மை கொண்டவை. இதனால், அதிகமாக உணவு உண்பதைத் தவிர்க்கலாம். மேலும், இது செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடை குறைய உதவுகிறது. 

சருமம் மற்றும் முடி பராமரிப்புக்கு ஆலிவ் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவமாக பார்க்கப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ தோலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவி, சுருக்கங்கள், வறட்சி போன்றவற்றைத் தடுக்கிறது. ஆலிவ் எண்ணெயை தலையில் மசாஜ் செய்வதால் முடி வளர்ச்சி அதிகரித்து, முடி பளபளப்பாக மாறும். 

இதையும் படியுங்கள்:
ஆலிவ் ஆயில் மற்றும் லெமன் ஜூஸை நீரில் கலந்து அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Olive Oil

ஆலிவ் எண்ணெய் சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு எண்ணையாகும். இதன் சுவை மிகவும் நறுமணம் மிக்கதாக இருப்பதால், உணவுகளுக்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவது உணவின் சுவையை அதிகரிக்கச் செய்யும். 

இவ்வாறு ஆலிவ் எண்ணெயில் பல அற்புத நன்மைகள் கொட்டிக் கிடைக்கின்றன. இதன் ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. எனவே, இந்த எண்ணெயை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், நீண்ட ஆயுளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெறலாம். இருப்பினும் எந்த ஒரு பொருளையும் போலவே ஆலிவ் எண்ணெயையும் அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நல்லதல்ல. எனவே, ஆலிவ் எண்ணெயை மிதமான அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com