ஆரஞ்சு பழத்தோல் டீயிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Orange Peel Tea
Orange Peel Teahttps://www.tuasaude.com

டீ பிரியர்களுக்கு தற்போது வித விதமான சுவையில் டீ தயாரிக்கப்பட்டு வீடுகளிலும் கடைகளிலும் சுவைத்து மகிழ வழங்கப்பட்டு வருகிறது. உடல் சுறுசுறுப்பு பெறவும் தேயிலையின் சுவைக்காகவும் டீ குடிக்க ஆரம்பித்தவர்கள், தற்போது இயற்கை தரும் விதவிதமான தாவரப் பொருட்களை உபயோகித்து அதிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். அவற்றில் ஒன்றான ஆரஞ்சு பழத் தோல் டீயிலிருக்கும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பொதுவாக, பழங்களிலுள்ள ஊட்டச் சத்துக்களைக் காட்டிலும் அவற்றின் தோல்களில் சத்து அதிகம் என்று கூறுவதுண்டு. அப்புறம் ஏன் அந்தப் பழத் தோலை தூரப் போடணும்?

கொதிக்கும் நீரில் உரித்த ஆரஞ்சு பழத் தோலைப் போட்டு இரண்டு மூன்று நிமிடம் வைத்திருந்து மணத்திற்காக ஒரு ஏலக்காய் மற்றும் சிறு துண்டு பட்டை சேர்த்து இறக்கி பின் வடிகட்டி ஆரஞ்சு ஜூஸ் மற்றும் இனிப்பூட்டி சேர்த்தால் ஆரஞ்சு பழத் தோல் டீ ரெடி.

இதையும் படியுங்கள்:
சதுப்பு நிலங்களைக் காப்போம்; சுற்றுச்சூழலை மேம்படுத்துவோம்!
Orange Peel Tea

இதிலுள்ள வைட்டமின் C, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல ஊட்டச் சத்துக்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. தினசரி இந்த டீயை அருந்தி வந்தால் உடலின் பாதுகாப்பு வளையத்தைப் பலப்படுத்தி கோடைகால நோய்களான சளி, ஃபுளு, ஒவ்வாமை போன்ற நோய்கள் வருவதைத் தடுக்கலாம். வாய் துர்நாற்றம் நீங்கி, பற்கள் வெண்மை பெறவும் இந்த டீ உதவுகிறது.

ஆரஞ்சு பழத் தோலிலுள்ள எண்ணெய்ப் பசை ஜீரணத்துக்கு உதவும் என்சைம்களை ஊக்குவிக்கவும், உணவுப் பொருள்களை நன்கு உடைத்து சத்துக்கள் முறையாக உறிஞ்சப்படவும் உதவுகிறது. இதனால் வயிற்று உப்புசம், வீக்கம், அஜீரணம், வாய்வு கோளாறுகள் போன்றவை வருவது தடுக்கப்படுகிறது. கேன்சர் நோய் வரும் அபாயமும் இதனால்நீங்குகிறது. பசியுணர்வை குறைத்து எடை குறைப்பிற்கும் இந்த ஆரஞ்சுப் பழத் தோல் டீ உதவுகிறது.

உடலுக்கு பல்வேறு நலன்களைத் தரும் ஆரஞ்சுப் பழத் தோல் டீயை நாமும் அருந்தி ஆரோக்கியம் காப்போமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com