உடல் ஆரோக்கியத்துக்கு இந்த ஒரு எண்ணெய் போதுமே!

Garlic Oil
Health benefits of using garlic oil
Published on

Health - உடல் ஆரோக்கியத்துக்கு இந்த ஒரு எண்ணெய் (Garlic Oil) போதுமே! 

பூண்டின் மருத்துவ குணங்கள் பற்றி நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. பண்டைய காலங்களில் இருந்தே பூண்டு மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகப் போற்றப்பட்டு வருகிறது.‌ அதன் சுவையும், வாசனையும் மோசமாக இருந்தாலும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டில் உள்ள ஆலிக்சின் என்ற சல்பர் சேர்மம் அதன் மருத்துவ குணங்களுக்கு முக்கிய காரணம். இன்று பூண்டு, எண்ணெய் வடிவிலும் கிடைக்கிறது. இது பூண்டின் அனைத்து நன்மைகளையும் தன்னுள் கொண்டுள்ளது. இந்தப் பதிவில் பூண்டு எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

  • பூண்டு எண்ணெய் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, ரத்த நாளங்களை விரிவுபடுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஆலிக்சின், கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ரத்தக்குழாய்களில் பிளேக் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. 

  • பாக்டீரியா, வைரஸ் மற்றும் புஞ்சை தொற்றுக்களை எதிர்த்து போராடும் திறன் பூண்டு எண்ணெய்க்கு உண்டு. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி சளி, காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. 

  • செரிமானக் கோளாறு உள்ளவர்கள் பூண்டு எண்ணெய் சாப்பிடுவது நல்லது.‌ இது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும், இது நல்ல பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவித்து செரிமானத்தை சீராக வைக்கிறது. 

  • இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலியை போக்குகிறது. இதனால், ஆர்த்தரைட்டிஸ் போன்ற நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். 

  • பூண்டு எண்ணெயில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், சரும செல்களை சேதப்படுத்தும் தீய மூலக்கூறுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. இதனால், முகப்பரு, வயதான தோற்றம், சரும வறட்சி போன்ற பிரச்சனைகளை சரி செய்யலாம். 

  • பூண்டு எண்ணெயை தொடர்ச்சியாக தலைக்கு பயன்படுத்தி வந்தால், உச்சந்தையில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சி அதிகரிக்கும். இது முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும். 

இப்படி, பூண்டு எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இருப்பினும் நீங்கள் இப்போதுதான் முதல் முறை பூண்டு எண்ணெய் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், அது உங்கள் உடலுக்கு ஒத்து வருகிறதா என்பதைத் தெரிந்து கொண்டு, பயன்படுத்துவது நல்லது. எந்த ஒரு புதிய உணவுப் பொருளை உணவாக எடுத்துக் கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com