கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

Wheatgrass
Wheatgrass
Published on

கோதுமைப் புல் என்பது கோதுமைச் செடியின் இளம் தளிர்களைக் குறிக்கிறது. கோதுமை செடியை நடவு செய்த ஏழு அல்லது எட்டு நாட்களில் இளம் தளிர்கள் பறிக்கப்பட்டு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

கோதுமைப் புல்லின் சிறப்பு: கோதுமைப் புல் சுமார் எழுபது சதவீதம் குளோரோஃபிலால் ஆனது. இது கோதுமைச் செடிக்கு பிரகாசமான பச்சை நிறத்தை அளிக்கிறது. ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் உணவு தயாரிக்கப் பயன்படுத்தும் பச்சை நிறமே குளோரோஃபில் எனப்படுகிறது. மனிதர்களுக்கு இரத்தத்தில் உள்ள புரதம், திசுக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. அதுபோல கோதுமைப் புல்லில் உள்ள குளோரோஃபில் பச்சை இரத்தம் என்று அழைக்கப்படுகிறது. கோதுமைப்புல்லை ஜூஸ் செய்து அருந்தி வருவதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.

கோதுமைப் புல்லில் உள்ள சத்துக்கள்: கோதுமைப் புல்லில் என்சைம்கள், 17 அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், ஃபிளாவனாயுடுகள், டானின்கள் போன்றவை உள்ளன. இதில் கலோரிகள் குறைவாகவும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், செலினியம், துத்தநாகம், இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகம். மேலும் கோதுமைப் புல்லில் கால்சியம், இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்றவையும் நிறைந்துள்ளன. இரண்டு அவுன்ஸ் கோதுமைப்புல் சாறு, ஐந்து பவுண்டுகள் பச்சைக் காய்கறிகளின் ஊட்டச்சத்துக் கலவையை கொண்டுள்ளது. கேரட்டை விட இரண்டு மடங்கு வைட்டமின் கே மற்றும் ஆரஞ்சு பழங்களை விட அதிக அளவு வைட்டமின் சி உள்ளது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்:

1. ஆற்றலைத் தருகின்றன: கோதுமைப் புல்லின் நொதிகள் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றவும், இரத்த ஓட்டத்திலிருந்து கன உலோகங்களை அகற்றவும் உதவுகின்றன. இதில் பி வைட்டமின்கள் உள்ளதால் இவை நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றும் செயல்முறைக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. இதில் உள்ள கார்போஹைட்ரேடுகள் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உணவில் உள்ள குறைபாடுகளை நிரப்ப உதவுகிறது. வெறும் வயிற்றில் கோதுமைப் புல் சாறு குடிக்கும்போது இருபதே நிமிடங்களில் இரத்த ஓட்டத்தில் கலந்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தேவையான ஆற்றலை வழங்குகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

2. நோய் எதிர்ப்பு மேம்பாடு: கோதுமைப்புல் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி நோய்களிலிருந்து மனிதர்களை காக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றன. இதில் உள்ள கலவைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கீமோதெரபியின் பாதகமான விளைவுகளை குறைக்கும். புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களை தடுக்கும். மேலும் ஆஸ்துமா, பல்வலி, உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் கோளாறுகள், இதய நோய், காது வலி போன்றவற்றுக்கும் இது நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இது மூட்டு வலியைக் குறைக்கிறது. கீல்வாதம் போன்ற அழற்சி தொடர்பான நோய்களுக்கு கோதுமைப்புல் திறம்பட சிகிச்சை அளிக்கும். மேலும் வகை டு நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை செய்கிறது.

3. செரிமான சக்தி: இதிலுள்ள அதிக நார்ச்சத்து சீரான குடல் இயக்கத்துக்கு உதவுகிறது. செரிமான நொதிகளின் உற்பத்தியை ஆதரிக்கின்றது. இந்த நொதிகள் உணவை உடைக்கவும் ஊட்டச்சத்து உறிஞ்சதலை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும், இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?
Wheatgrass

4. கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு: கோதுமை புல்லில் உள்ள இலைகள் உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து நன்மை பயக்கும் கொழுப்பின் அளவை சீராக வைக்கிறது.

5. நினைவாற்றல் செயல்பாடு: மூளையின் இயக்கத்திற்கு பெரிதும் உதவி செய்கிறது. நினைவாற்றல் மற்றும் கற்றலில் ஈடுபடும் பகுதிகளில் தூண்டிவிடுவதால் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com