
காருக்குள் வைத்திருக்கும் வாட்டர் பாட்டிலில் காரின் அதிக உஷ்ணம் காரணமாக பாக்டீரியாக்கள் உருவாகி இதனால் கெமிகல் ரியாக்ஷன் ஏற்பட்டுகிறது. அந்த நீரைக் குடிப்பதால் உடலுக்குத் கெடுதல் நேரும். சுற்றுச்சூழல் ஆராய்ச்சியின் படி, அதிக உஷ்ணத்தால் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து bishenol A(BPA) மற்றும் phthalates போன்ற கெமிகல்கல்கள் தண்ணீருக்குள் சேருவதாக அறியப்படுகிறது. மேலும் பல ட்ரில்லியன் நானோ ப்ளாஸ்டிக் துகள்கள், நம் ஹார்மோன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி கூறுகிறது.
இந்த நீரை குடிக்கும் போது பல மடங்கு பாக்டீரியாக்கள் உடலில் கலக்கின்றன. இதனால் செரிமானம் பிரச்னை மற்றும் வயிற்றுக் கோளாறுகள் உண்டாகலாம்.
காருக்குள் பிளாஸ்டிக் பாட்டிலை வைக்கும் போது காரின் கதவு வழியாக சுட்டெரிக்கும் சூரியன் பட்டு பாட்டில் சூடாகி விடும். இந்த நீரைக் குடிப்பதால் உடலுக்குத் கெடுதல் விளையும். அதிக சூரிய வெளிச்சம் பிளாஸ்டிக் பாட்டிலில் விழுந்தால் தீப்பிடிக்கவும் வாய்ப்புண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்!
காருக்குள் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பாட்டிலில் நீரை குடிக்கும்போது மார்பு மற்றும் ப்ராஸ்டேட் புற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உடல் மெடபாலிசம் பாதிக்கப்பட்டு நீரிழிவு உண்டாகலாம். காருக்குள் இருக்கும் உஷ்ணமான நீரைக் குடிப்பதால் மூளை பாதிப்பும் ஏற்பட வாய்ப்புண்டு.
மாற்று வழிகள்:
இந்த பாதிப்புகளைக் தடுக்க நாம் பிளாஸ்டிக் பாட்டிலைத் தவிர்த்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில்களை உபயோகிக்கலாம். மேலும் அதில் இயற்கை மணம் கூட்ட எலுமிச்சை, புதினா மற்றும் வெள்ளரித்துண்டுகளையும் பயன்படுத்தலாம். கண்ணாடி பாட்டிலும் உபயோகிக்கலாம்.
ஒருமுறை உபயோகித்த பாட்டிலை தவிர்த்து வேறு பாட்டில் உபயோகியுங்கள்.
கூடியவரை ப்ளாஸ்டிக்கைத் தவிர்ப்பது நலம்.