குளிர் காலத்தில் அருந்தவேண்டிய ஆரோக்கிய பானங்கள்!

Healthy drinks to drink in cold season
Healthy drinks to drink in cold season

குளிர் காலங்களில் நமது உடல் உஷ்ணத்தை இழக்காமல் பாதுகாக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து குளிர்கால நோய்களான இருமல், ஜுரம் போன்றவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளவும் என்னென்ன சூடான பானங்களை அருந்தலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஷோர்பா: இது தண்ணீரில் சில வகைக் காய்கறிகள் மூலிகைகளுடன் மஞ்சள் சீரகம் குங்குமப்பூ ஆகியவை சேர்த்து சூப் போல் தயாரிக்கப்படுவது. ஊட்டச்சத்து மிக்கது. உடல் வெப்ப நிலையை சரியான அளவில் பராமரிக்கக்கூடிய தெர்மோஜெனிக் பண்புகள் கொண்டது.

பாதாம் பால்: ஊற வைத்து தோலுரித்த பாதாம் பருப்புகளை அரைத்து சூடான பாலில் கலந்து தயாரிக்கப்படுவது. பாதாமில் உள்ள வைட்டமின்களும் ஆன்டி ஆக்சிடன்ட்களும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, ஃபுளு ஜுரம் போன்றவற்றின் தொற்று தாக்குவதிலிருந்து நம்மைக் காக்க வல்லது.

காவா டீ (Kahwa Tea): இதில் சேர்க்கப்படும் பட்டை, ஏலக்காய் போன்றவை அதிகளவு ஊட்டச்சத்து கொண்டவை. அவற்றிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் உடல் வெப்ப நிலையை சீராக வைக்கும். காஷ்மீரி காவா டீ அதிக பலன் கொடுக்கக் கூடியது. ஏனெனில், அவற்றில் ரோஸ் இதழ்கள், குங்குமப்பூ, பாதாம் மற்றும் மேலும் பல இந்திய ஸ்பைஸஸ் சேர்த்து தயாரிப்பதே காரணம்.

மசாலா டீ: பட்டை, ஏலக்காய், மிளகு, லவங்கம், ஜாதிக்காய் போன்ற ஸ்பைஸஸ் சேர்த்து தயாரிக்கப்படுவது. மற்ற பானங்கள் போலல்லாது உடல் வெப்பதை விரைவாக உயர்த்தி, குளிரிலிருந்து காப்பாற்றக் கூடியது.

ஹாட் சாக்லேட்: இது குளிர் காலத்துக்கு உடம்புக்கு வெது வெதுப்பு தரக்கூடியது. குடிப்பதற்கு அதிக சுவை கொண்டது.

இதையும் படியுங்கள்:
வெல்லம் சேர்த்த டீயிலிருக்கு வித விதமான நன்மைகள்!
Healthy drinks to drink in cold season

கதா (Kadha): ஊட்டச்சத்து மிக்கது. மருத்துவ குணம் கொண்டது. பட்டை, மிளகு, லவங்கம், இஞ்சி, துளசி இலை, மஞ்சள், உலர் திராட்சை போன்றவை சேர்த்து தயாரிக்கப்படும் கஷாயம் போன்ற பானம் இது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் குளிரிலிருந்தும், இருமல் ஜுரத்திலிருந்தும் நம்மை காக்கக்கூடியது.

கோல்டன் மில்க்: சூடான பாலில் மஞ்சள் தூள், தேன் சேர்த்து தயாரிக்கப்படுவது. மஞ்சள் தூள் சோர்வை நீக்கும். தேன் வெப்ப நிலையை சீராகப் பராமரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரும். குளிருக்கு இதம் கொடுக்கக்கூடியது.

மேலே குறிப்பிட்ட சூடான, சுவையான ஆரோக்கிய பானங்களை அடிக்கடி அருந்தி உடல் நலம் காப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com