

பொதுவாகவே வெயில்காலத்தை விட குளிர்காலங்களில் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்குப் பின்னால் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலான மக்கள் இந்தக் காரணத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குளிர்காலங்களில் பக்கவாதத்தாலும், மாரடைப்பாலும் பாதிக்கப்படுபவர்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் முதியவர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தான். இதற்கு முக்கிய காரணம் திடீரென இரத்த அழுத்தம் அதிகரிப்பதுதான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிக நபர்களுக்கு ரத்த அழுத்தம் பிரச்னை என்பது இருக்கும். இது இந்த அளவு பிரச்னையை ஏற்படுத்தும் என்பது அதிர்ச்சிகரமான ஒன்று தான். மேலும் இரத்த அழுத்த பிரச்னைகள் வயதானவர்கள் மற்றும் நடுத்தர வயதினரிடையே மிகவும் பொதுவானவை. அதனால்தான் இந்த வயதினரிடையே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அடிக்கடி நிகழ்வதாக கருதப்படுகிறது.
சரி மாரடைப்பு எந்த வயதினருக்கு எதனால் வருகிறது என்பதை தெரிந்து கொண்டோம். அதே போல் எந்த நேரத்தில் வருகிறது என்பதை பார்க்கலாம் வாங்க..
பொதுவாக குளிர்காலத்தில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை இதயம் மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நேரத்தில் எல்லா வயதினரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த நேரத்தில் நீங்கள் குளியலறைக்குச் செல்ல வேண்டியிருந்தால், நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
குளிர்காலத்தில், படுக்கையில் இருந்து எழுவதற்கு முன் சில வினாடிகள் உட்காருங்கள். சுமார் 40 வினாடிகள் அமர்ந்த பிறகு, 1 நிமிடம் உங்கள் கால்களைத் தொங்கவிட்டு, சூடான ஆடைகளை அணிந்த பின்னரே எழுந்திருங்கள். இது இரத்த ஓட்டத்தை பராமரிக்கவும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
பலருக்கு இந்த உண்மை தெரியாது. அதனால்தான் கோடை காலத்தை விட குளிர்காலத்தில் மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.