மாரடைப்பு: முகத்தில் இந்த அறிகுறிகள் தோன்றினால் ஜாக்கிரதை! 

Heart Attack
Heart Attack
Published on

மாரடைப்பு என்பது நாம் எதிர்பாராத நேரத்தில் திடீரென ஏற்படும் ஒரு நோய் தாக்குதல் ஆகும். இது உலக அளவில் பலரது இறப்புக்கு காரணமாக இருக்கிறது. மரடைப்பு ஏற்படுவதற்கு முன் உடலில் பல அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம். குறிப்பாக முகத்தில் தென்படும் சில அறிகுறிகள் மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். அவை என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

மாரடைப்பின் போது முகத்தில் தென்படும் அறிகுறிகள்: 

முகத்தின் ஒரு பக்கம் வழக்கத்தை விட இறங்கி இருப்பது மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். இது முகநரம்பு பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. 

முகம் அதிகமாக வியர்த்துப் போதல் அல்லது உணர்வு இல்லாமல் போதல் முக நரம்புகளின் செயல்பாடு பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. 

முகத்தில் அதிகப்படியான வலி அல்லது அசௌகரியம் ஏற்படலாம். இது முக நரம்புகள் அழுத்தப்படுவதால் ஏற்படுகிறது. சிலருக்கு முகம் சிவந்து போவது அல்லது வெளிரி இருப்பது போல தோன்றும். இது ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. 

பேசுவதற்கு கடினமாகவும், பேச்சு தெளிவு இல்லாமல் இருக்கும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும். இதில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. 

முகத்தில் தெரியும் மாரடைப்பு அறிகுறிகள் மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக ஏற்படுகின்றன. இதயத்திற்கு ரத்தம் செல்லும்போது இடையூறு ஏற்படுவதால், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால், மூளையின் சில பகுதிகள் செயலிழந்து முகம் வளைவது, பேச முடியாமல் போவது போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. 

முகத்தில் தெரியும் மாரடைப்பு அறிகுறிகளை சரியான நேரத்தில் அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். ஏனெனில், இது உடனடியாக மருத்துவ உதவி பெற உதவும். விரைவான சிகிச்சை மூலம் இதய தசைகளின் சேதத்தைக் குறைத்து உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். 

இதையும் படியுங்கள்:
வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் மீண்டும் பசிக்குதா? இது எதன் அறிகுறி தெரியுமா? 
Heart Attack

இந்த அறிகுறிகளைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? 

இத்தகைய அறிகுறிகளைக் கண்டால், பதட்டப்படாமல் 108 அவசர கால சேவை எண்ணுக்கு அழைத்து உதவி கேட்க வேண்டும். பாதிப்புடைய நபரை அமைதியாக இருக்க செய்து அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். அந்த நபரை உட்கார வைத்து அவர்களின் கால்களை உயர்த்த வேண்டும். குறிப்பாக, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் கொடுக்கக்கூடாது. 

மாரடைப்பு ஏற்படுவதை நிச்சயமாக யாராலும் தடுக்க முடியாது என்றாலும், சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை குறைக்கலாம். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, உடல் எடையைக் கட்டுப்படுத்துதல், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றின் மூலமாக மாரடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com