குளிர்காலத்தில் எமன் இந்த ரூபத்தில் வருவான்… மறந்தும் இந்த 4 உணவுகளைத் தொடாதீர்கள்!

Heart attack
Heart attack
Published on

ஜில்லென்று காற்று வீசும் குளிர்காலம் அல்லது மழைக்காலம் வந்தாலே, நமக்கெல்லாம் ஒரு அலாதி பிரியம் வந்துவிடும். கம்பளியைப் போர்த்திக்கொண்டு, சூடாக எதையாவது கொறிக்க வேண்டும் என்று நாக்கு அலைபாயும். ஆனால், இந்த ஆசை சில சமயங்களில் விபரீதத்தில் போய் முடியும். 

சமீபகாலமாக வயது வித்தியாசமின்றி மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, மற்ற காலங்களை விடக் குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் 50 சதவீதம் வரை அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குளிர் காலத்தில் நம் ரத்த நாளங்கள் சுருங்குவதால், இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய அதிக சிரமப்படும். 

இந்த நேரத்தில், நாம் சாப்பிடும் சில தவறான உணவுகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல நிலைமையை மோசமாக்கிவிடும். நம் இதயத்தைக் காக்க, குளிர்காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 4 உணவு வகைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. கேரட்: பொதுவாகக் கேரட் உடலுக்கு நல்லதுதான். ஆனால், குளிர்காலத்தில் கேரட் மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக, அதை அப்படியே சாப்பிடாமல், சர்க்கரை மற்றும் நெய் சேர்த்துக் 'கேரட் அல்வா', 'கேரட் கீர்' என்று செய்து சாப்பிடுவது வழக்கம். இப்படிச் சமைக்கும்போது, அதில் கலக்கப்படும் அதிகப்படியான சர்க்கரை மற்றும் நெய், ரத்தத்தில் 'ட்ரை கிளிசரைடு' (Triglyceride) அளவை எக்கச்சக்கமாக உயர்த்தும். இது இதயத்திற்குப் பெரிய சுமையை ஏற்படுத்தும். எனவே, கேரட்டைப் பச்சையாகவோ அல்லது பொரியலாகவோ சாப்பிடுங்கள்; அல்வாவாக வேண்டாம்.

2. வெண்ணெய்: குளிர் தாங்க வேண்டும் என்பதற்காகப் பலரும் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பாக ஹோட்டல்களில் கிடைக்கும் பட்டர் சிக்கன், மட்டன் ரோகன் ஜோஷ் போன்ற உணவுகளில் ஏற்கனவே இருக்கும் இறைச்சிக் கொழுப்புடன், சுவைக்காகக் கூடுதல் வெண்ணெய்யும், கிரீமும் சேர்ப்பார்கள். குளிர்காலத்தில் நம் செரிமான மண்டலம் சற்று மந்தமாகவே இருக்கும். இந்நிலையில், இந்த அதிகப்படியான கெட்ட கொழுப்பு (LDL) ரத்தக்குழாய்களில் படிந்து, மாரடைப்புக்கு சிவப்புக் கம்பளம் விரித்துவிடும்.

இதையும் படியுங்கள்:
எண்ணெய் பிசுக்கு படிந்த கடாயை சுத்தம் செய்ய இனி ரொம்ப ஈசிதாங்க!
Heart attack

3. எண்ணெய் பலகாரங்கள்: மாலை நேரத்தில் காபி குடித்துக்கொண்டே சூடான பஜ்ஜி, போண்டா, சமோசா சாப்பிடுவது சொர்க்கம் போலத் தோன்றலாம். ஆனால், இந்த வறுத்த உணவுகள் குளிர்காலத்தில் உங்கள் இதயத்திற்கு முதல் எதிரி. எண்ணெயில் பொரித்த உணவுகள் ரத்தத்தில் கொழுப்பை அதிகரித்து, ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். எனவே, நாவின் ருசியை விட இதயத்தின் துடிப்பு முக்கியம் என்பதை உணர்ந்து, எண்ணெய் பலகாரங்களுக்கு 'நோ' சொல்லுங்கள்.

4. எள்: எள் உடலுக்குச் சூடு தரும் என்பது உண்மைதான். ஆனால், நாம் எள்ளை அப்படியே சாப்பிடுவதில்லை. அதை எள் உருண்டையாக, வெல்லம் அல்லது சர்க்கரை பாகில் கலந்துதான் சாப்பிடுவோம். எள்ளில் உள்ள கொழுப்பு அமிலங்களும், வெல்லத்தின் சர்க்கரையும் சேரும்போது அது கலோரிகளை அதிகரித்து, இதயத்திற்குத் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கும். எள்ளை வறுத்துச் சட்னியாகவோ அல்லது துவையலாகவோ சேர்த்துக்கொள்ளலாமே தவிர, இனிப்புப் பண்டமாக வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
மருத்துவ உலகில் தொழில்நுட்ப புரட்சி: நானோபோட்கள் மூலம் இதய நோய்க்கு தீர்வு!
Heart attack

இதயத்தைக் காக்க என்ன செய்ய வேண்டும்?

உணவைக் கட்டுப்படுத்துவது மட்டும் போதாது. தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது விறுவிறுப்பான நடைப்பயிற்சி அவசியம். குளிர்காலம் என்று போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு முடங்கி கிடக்காதீர்கள். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; யோகா அல்லது தியானம் அதற்கு உதவும். காய்கறிகள், பழங்கள், நட்ஸ் மற்றும் முழு தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

"வாயைக் கட்டினால் நோயைக் கட்டலாம்" என்பது பழமொழி. அது குளிர்காலத்திற்கு மிகவும் பொருந்தும். ஒருவேளை உணவின் ருசிக்காக, விலைமதிப்பற்ற உயிரைப் பணயம் வைக்காதீர்கள். மேலே சொன்ன உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், எந்தப் பருவநிலையிலும் உங்கள் இதயம் சீராகத் துடித்துக்கொண்டே இருக்கும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com