மனித உடலில் உள்ள கல்லீரல் எனப்படும் முக்கியமான உறுப்பு பல்வேறு செயல்பாடுகளை செய்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. Hepatitis B எனப்படும் வைரஸ் தொற்று, இந்த முக்கிய உறுப்பை பாதித்தது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த வைரஸ் தொற்று உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதித்து வருகிறது. இந்தப் பதிவில் ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஹெபடைடிஸ் பி என்பது கல்லீரலை பாதிக்கும் ஒருவகை வைரஸ் தொற்று ஆகும். இந்த வைரஸ் தொற்று HBV எனப்படும் ஒரு வைரஸால் ஏற்படுகிறது. இது ரத்தம், உமிழ்நீர், உடலுறவு மற்றும் தாய்ப்பால் மூலமாக பரவுகிறது.
Hepatitis B-யின் அறிகுறிகள்:
இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடலாம். சில நபர்களுக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படாமல் இருக்கலாம். ஆனால் சிலருக்கு பொதுவாக கீழ்கண்ட அறிகுறிகள் தென்படும் வாய்ப்புள்ளது.
மஞ்சள் காமாலை
தசை மற்றும் மூட்டு வலி
சோர்வு
வாந்தி
பசியின்மை
வயிற்று வலி
அடர் நிற சிறுநீர்
வெளிறிய நிறத்தில் மலம்
ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று கடுமையான கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தி, சில நேரங்களில் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
தடுப்பு நடவடிக்கைகள்:
Hepatitis B வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியமான தடுப்பு நடவடிக்கையாகும். உடலுறவு கொள்ளும் போது மிகவும் பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளுதல் வேண்டும். கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். தொற்றுள்ள ஊசிகள், ரேசர் போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ரத்த தானம் செய்வதற்கு முன் ரத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
இதுவரை இந்த வைரஸுக்கு எந்த குறிப்பிட்ட மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், வைரஸின் செயல்பாட்டை கட்டுப்படுத்தவும் கல்லீரல் பாதிப்பை குறைக்கவும் மருந்துகள் கொடுக்கப்படும்.
இந்த வைரஸ் கல்லீரலை பாதிக்கும் ஒரு மிகவும் ஆபத்தான நோய். ஆனால், இந்த நோயை முற்றிலுமாக தடுக்க முடியும். இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடுவதன் மூலம் இது நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு Hepatitis B வைரஸ் தொற்று ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.