டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனை சமநிலையில் வைக்க உதவும் மூலிகைகள்!

Ashwagandha herb
Ashwagandha herbhttps://www.indiatvnews.com

டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்பது விந்தணுக்களில் உற்பத்தி செய்யப்படும் ஆண்பாலின ஹார்மோன் ஆகும். இதன் அளவு பாலியல் செயல்பாடுகளில் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், வேறு பல இயக்கங்களுக்கும் உதவி புரியக் கூடியது இந்த ஹார்மோன். வயது அதிகரிக்கும்போது இதன் அளவு குறைந்து ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உண்டாகிறது. இயற்கை முறையில் இந்த ஹார்மோன் அளவை சமநிலையில் வைக்க பல மூலிகைகள் உதவி புரிகின்றன. அம்மாதிரியான சில மூலிகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

அஸ்வகந்தா என்ற மூலிகையானது உடலில் உண்டாகும் ஸ்ட்ரெஸ், சோர்வு மற்றும் கவலைகளைக் குறைத்து மீண்டும் உடல் சமநிலை பெற உதவக்கூடியது. கரு உருவாகும் அளவுக்கு  ஆரோக்கியமான டெஸ்டோஸ்டெரோன் அளவைத் தர ஆண்களுக்கு  உதவக்கூடிய மூலிகை இது.

ட்ரெய்புலஸ் டெரெஸ்ட்ரிஸ் (Tribulus Terrestris) என்ற மூலிகை ஆண்களின் லிபிடோ (உணர்ச்சி) அளவை அதிகரிக்கவும் சுமுகமான பாலியல் செயல்பாடுகளுக்கும் உதவக்கூடிய பாரம்பரிய  மருந்துகளின் தயாரிப்பில்  உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக உள்ள ஆண்களுக்கு பயனளிக்கக் கூடியது இது.

இதையும் படியுங்கள்:
சாதாரண நீர் தெரியும்; கனநீர் என்றால் என்னவென்று தெரியுமா?
Ashwagandha herb

வெந்தய விதைகளும் சப்ளிமென்ட்களும் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கச் செய்யும் குணமுடையவை. இதிலுள்ள ஒரு கூட்டுப்பொருளானது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை ஈஸ்ட்ரோஜெனாக மாற்றும் குணம் கொண்ட என்சைம்களை அழிக்கும் திறன் கொண்டது.

வெல்வெட் பீன் எனப்படும் ம்யுகுனா புரூரின் (Mucuna Pruriens) என்ற மூலிகையிலுள்ள L. Dopa என்ற கூட்டுப்பொருள் டோப்போமைன் (Dopomine) என்ற ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் இது டெஸ்டோஸ்டிரோன் அளவை ஆரோக்கியமான நிலையில் வைத்துப் பராமரிக்கவும் செய்கிறது.

ஜின்சென்ங் (Ginseng) என்பது ஒரு அடாப்டோஜெனிக்  மூலிகை. பாரம்பரிய மருந்துகளின் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகிறது. பாலியல் செயல்பாடுகளில் நேர்மறை விளைவுகளைத் தரக்கூடியது. உயிர்ச் சக்தி தருவதற்கு உகந்த தரமான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை உற்பத்தி செய்யக் கூடியது இந்த அற்புதமான மூலிகை. அதை சமநிலையில் வைக்கவும், ஆண்களின் மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடியது இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com