வீட்டு வைத்தியத்திலேயே ஒற்றைத் தலைவலியை குணமாக்க சில ஆலோசனைகள்!

வீட்டு வைத்தியத்திலேயே ஒற்றைத் தலைவலியை குணமாக்க சில ஆலோசனைகள்!
Carlos Caetano

‘மைக்ரேன்' (Migraine) எனப்படும் ஒற்றைத்தலைவலி நரம்பு தொடர்பான ஒரு வகை நோய் ஆகும். பொதுவாக, பருவமடையும் வயதில் தொடங்கும் இந்த மைக்ரேன் தலைவலி பிரச்னை, 35 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருப்பவர்களைத்தான் அதிகம் பாதிக்கும். வீட்டு கை வைத்தியத்திலேயே இந்த ஒற்றைத் தலைவலியைப் போக்க சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

* நொச்சித்தழையை வெண்ணீரில் போட்டு ஆவி பிடித்தாலே, பெரும்பாலும் இந்த ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு காணலாம்.

* எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது, ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.

* கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

* ஒற்றைத் தலைவலிக்கு தும்பைப் பூவை சாறு பிழிந்து, ஒரு மெல்லிய துணியில் நனைத்து நெற்றியில் பற்றுப் போட நிவாரணம் கிடைக்கும்.

* பால், இஞ்சி சாறு மற்றும் நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு மூன்றையும் கலந்து சூடு செய்து தலைக்குத் தடவி ஒரு ஐந்து நிமிந்து நன்கு மசாஜ் செய்த பின்பு சிகைக்காய் போட்டு தலைக்கு குளித்தால் ஒற்றைத் தலை வலி நீங்கும்.

* அரை ஸ்பூன் கடுகுப் பொடியை முன்று ஸ்பூன் தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

* ஆறுமுக செந்தூரம், கவுரி சிந்தாமணி செந்துாரம் ஆகிய மருந்துகளை, சுக்கு, மிளகு, திப்பிலி சேரக்கூடிய திரிகடுகு சூரணத்துடன் சேர்த்து உட்கொண்டால் ஒற்றை தலைவலிக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

* வில்வ இலையை நன்கு அரைத்து வைத்துக்கொண்டு பதினைந்து நாட்கள் முதல் இருபது நாட்கள் வரை தொடர்ந்து ஒரு பட்டாணி அளவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் தொல்லை கொடுத்த ஒற்றைத் தலைவலி நீங்கும்.

* பூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆறின பிறகு தலையில் தேய்த்து குளித்தாலும் ஒற்றைத் தலைவலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com