Home Herbs to Treat Winter Joint Pain
Home Herbs to Treat Winter Joint Painhttps://enewz.in

குளிர்கால மூட்டு வலியை சமாளிக்க உதவும் வீட்டு மூலிகைகள்!

Published on

‘கீல்வாதம்’ எனப்படும் மூட்டுவலி  பெரும்பாலும் 60 முதல் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கிறது. குளிர்காலத்தில் அது மூட்டுகளில் கடுமையான வலி மற்றும் வீக்கத்தை அதிகப்படுத்துகிறது. வீட்டில் இருக்கும் மூலிகைப் பொருட்களை வைத்து மூட்டுவலியைக் குறைப்பது எப்படி என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

மூட்டுவலியை குறைக்க வீட்டு மூலிகை வைத்தியம்:

கற்றாழை: கற்றாழையில் வைட்டமின் ஏ, சி மற்றும் B12 உள்ளதால், இது நோய் அழற்சி எதிர்ப்பு குணத்தைக் கொண்டுள்ளது. இதனால் மூட்டுவலி கணிசமாக குறைக்கிறது. கற்றாழையின் முட்பகுதி மற்றும் தோலை சீவி விட்டு உள்ளிருக்கும் ஜெல்லை எடுத்து, வீங்கிய மூட்டுகளின் மேல் வைத்து மென்மையாக மசாஜ் செய்தால், வீக்கம் குறையும். வலியும் மட்டுப்படும். கற்றாழை ஜெல்லை வாய்வழியாக உட்கொள்வதால் கீல்வாத வலியிலிருந்து விடுபடலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கருநொச்சி இலைகள்: இதில் அழற்சி எதிர்ப்பு, வலிப்பு எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது மூட்டு வலியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான மூலிகையாகும். நொச்சி இலைகளை ஒரு துணியில் முடிந்து சூடு படுத்திக்கொண்டு ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும்.  இலைகளைப் பயன்படுத்தி ஒரு பேஸ்ட் போல செய்து, அதை மூட்டுகளில் தடவினாலும் வலியும் வீக்கமும் குறையும்.

ஓமம்: நீரைக் கொதிக்க வைத்து அதில் ஓம விதைகளைப் போட்டுக் குடித்தாலும் வலி குறையும். விதைகளை நீர் விட்டு அரைத்து பேஸ்ட் செய்து அதை மூட்டுகளில் தடவலாம். வெந்நீரில் ஒரு ஸ்பூன் ஓமம்  சேர்த்து, வலியுள்ள மூட்டுகளின் மேல் ஒத்தடம் தந்தாலும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
குடைமிளகாயில் இத்தனை நன்மைகளா?
Home Herbs to Treat Winter Joint Pain

யூகலிப்டஸ்: யூகலிப்டஸ் இலைகளை அரைத்து மூட்டுகளில் தடவினால் வலி குறையும். நொச்சி இலைகளைப் போலவே இந்த இலைகளையும் பயன்படுத்தி மூட்டுகளின் மேல் ஒத்தடம் தந்தால் வீக்கம் குறையும்.

இஞ்சி: இந்திய சமையலறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகையாகும். இஞ்சியில் உள்ள ஆன்டிசெப்டிக் பண்புகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, பாதிக்கப்பட்ட பகுதியை குணப்படுத்த உதவுகிறது. இஞ்சி டீ போட்டு குடித்தாலும், இஞ்சியை அரைத்து அந்தப் பேஸ்ட்டை மூட்டுகளில் தடவினாலும் வலி குறையும்.

logo
Kalki Online
kalkionline.com