தலைவலியைப் போக்கும் வீட்டு மூலிகைகள்!

தலைவலியைப் போக்கும் வீட்டு மூலிகைகள்!

லைவலி சிலருக்கு அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். சிலருக்கு எப்போதாவது வரும். அப்படிப்பட்ட சமயங்களில் வலியின் காரணமாக செய்யும் வேலையில் கவனம் குறைந்து போகும். எல்லா சமயங்களிலும் தலைவலி மாத்திரைகள் எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. வீட்டில் வளர்க்கும் சில மூலிகைச் செடிகளைக் கொண்டே தலைவலியைப் போக்கிவிடலாம்.

1. ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளைப் பறித்து, லேசாக தண்ணீர் தெளித்து மிக்ஸியில் மை போல அரைத்துக் கொள்ளவும். சந்தன வில்லைகள் இரண்டை எடுத்து நீரில் கரைத்து, துளசி பேஸ்ட்டுடன் கலந்து கொள்ளவும். இந்த  பேஸ்ட்டை நெற்றியில் தடவிக்கொண்டால், சிறிது நேரத்தில்  தலைவலி குணமாகி விடும்.

பொதுவாக, மன அழுத்தம், செரிமானக் கோளாறு காரணமாகவே தலைவலி வருகிறது. தினமும் காலையில் பத்து துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மன அழுத்தம் குறைகிறது. துளசி செரிமானத் திறனை மேம்படுத்தி,  நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. அதனால் தலைவலி வருவது குறைக்கப்படுகிறது.

2. கற்றாழையின் நீளமான தண்டு ஒன்றை நறுக்கிக்கொள்ளவும். பக்கவாட்டு மற்றும் மேல் தோலை கத்தியால் நீக்கிவிடவும். வெள்ளைநிற ஜெல் போன்ற பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். அந்தப் பேஸ்ட்டை  நெற்றியில் பற்றுப் போட்டு அரை மணி நேரம் கழித்து  நீரில் கழுவவும். இதனால் உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலி போய்விடும்.

3. திருநீற்றுப் பச்சிலை இலைகளை கசக்கி முகர்ந்து பார்த்தாலே மனதிற்கு இதமாக இருக்கும். தலைவலி அதிகமாக இருந்தால் இந்த இலைகளை அரைத்து நெற்றியில் அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குறையும்.

4. கொஞ்சம் வேப்பிலைகளை அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் இவற்றைப் போட்டு வைத்து இந்த எண்ணெயை தலைக்குத் தடவி வந்தால், அடிக்கடி தலைவலி வருவது குணமாகி விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com