Skin cancer
Skin cancer

அதிகரிக்கும் வெப்பம்! சருமப் புற்றுநோய்க்கான அபாயம்!சரும பாதுகாப்பு மருத்துவர்கள் கூறுவது என்ன?

தொகுப்பு: த. கண்மணி

 இந்தியாவில் புற்றுநோய் என்பது மிக முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளது. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கையும், புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தொடர்ந்து எச்சரித்து வருகிறது. அதன்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ஆம் ஆண்டில் 14.61 லட்சமாக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2025இல் 15.70 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, புற்றுநோய்க்கான சிகிச்சையைவிட மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்களில் கவனமாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது நல்லது.

இன்னும் சொல்லப்போனால், மிக குறுகிய காலகட்டத்தில் இந்தியா உலக நாடுகளின் ‘கேன்சர் தலைநகரமாக’ மாறிவிடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

சருமப் புற்றுநோய்:

சருமப் புற்றுநோய் என்பது மிகவும் பொதுவான புற்றுநோய் வகையைச் சேர்ந்த ஒன்றாகும். இது சருமத்தில் உள்ள உயிரணுக்களின் இயல்பிலிருந்து ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உயிரணுக்களின் பெருக்கத்தின் காரணமாக ஏற்படுகிறது. மேலும் இந்த நோயானது  உடலில் பல்வேறு பகுதிகளுக்கும்  பரவக்கூடிய வீரியம் கொண்டது. எனவே, இதனை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

எவ்வாறு காத்துக்கொள்வது?

சுட்டெரிக்கும் நாட்கள் வந்தாச்சு. கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலில் நமது சருமம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. சரும பாதுகாப்பு குறித்தும் சருமப் புற்றுநோயிலிருந்து எவ்வாறு காத்துக்கொள்வது என்பது குறித்தும் தெளிவாக விளக்குகிறார் அனுபவம் மிகுந்த, பிரபல மருத்துவர்கள் டாக்டர் ஷ்ரதா மற்றும் டாக்டர். முத்து லதா.

Dr. M. Shraddha MD, DNB, PhD & Dr. Muthulatha Arumugavelan MD
Dr. M. Shraddha MD, DNB, PhD & Dr. Muthulatha Arumugavelan MD
Q

சருமப் புற்றுநோய் என்றால் என்ன?

A

சருமப் புற்றுநோய் என்பது சருமத்தில் இருக்கக்கூடிய செல்களின் அசாதாரண அல்லது கட்டுப்பாடற்ற பெருக்கமாகக் கருதப்படுகிறது.

Q

சருமப் புற்றுநோயின் வகைகள் என்ன?

A

பாசல் செல் கார்சினோமா, ஸ்குவாமஸ் செல் கார்சினோமா மற்றும் அதிக வீரியம் மிக்க மெலனோமா ஆகியவை பொதுவான சருமப் புற்றுநோயின் வகைகளாகும். இருப்பினும் இவை அனைத்துமே ஒருவித அரிதான புற்றுநோய் வகையைச் சார்ந்தவைதான். சருமப் புற்றுநோய்க்கான முன்கூட்டிய நிலைகளும் இருக்கின்றன.

Q

சருமப் புற்றுநோயின் அறிகுறிகள்?

A

பொதுவாக சருமத்தினுடையஅளவு மற்றும் நிறத்தில் திடீர் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் சருமப் புற்றுநோய் குறித்த சந்தேகம் அவசியம் தான். அதுபோக சருமத்தின் இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட தோற்றம். மேலும், ஏதேனும் நீண்ட கால சருமப் புடைப்பு, காரணமில்லாத கசிவு அல்லது ரத்தப்போக்கு இவை அனைத்தும் சரும புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும். இதற்கு ஒரு பயாப்ஸி டெஸ்ட் செய்யப்பட வேண்டும். இந்த டெஸ்டானது நோயறிதல் மற்றும் உறுதிப்படுத்தலுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

Q

சருமப் புற்றுநோய் எவ்வளவு விரைவாக உடலில் வளர்ந்து பரவுகிறது?

A

சருமப் புற்றுநோயின் பரவலானது முழுக்க முழுக்க அதனுடைய வகையைப் பொறுத்தது. அந்தவகையில் இது சருமத்தில் பரவுவதற்கு வாரங்கள் முதல் ஆண்டுகள் வரை ஆகும்.

Skin cancer
Skin cancerImg Credit: Dr Juliet Williams
Q

சிகிச்சைகள் எவ்வாறு நடக்கும்? நிரந்தரமாகக் குணப்படுத்தமுடியுமா?

A

சருமப் புற்றுநோயை குணப்படுத்துவதற்கான சாத்தியம் என்பது அதன் வகை மற்றும் நீட்டிப்பைப் பொறுத்தது. பெரும்பாலான சருமப் புற்றுநோய் வகைகளை குணப்படுத்த முடியும். வாழ்நாள் முழுவதும் மருத்துவத்தைப் பின்தொடர்தல் தேவைப்படலாம்.

சருமப் புற்றுநோய்க்கான சிகிச்சையானது அதன் வகை, காலம் மற்றும் நிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். அதன் அடிப்படையில் மருத்துவ மேலாண்மை (கிரீம்கள்), நீக்குதல்(excision), அறுவை சிகிச்சை, கிரையோதெரபி(cryotherapy), ரேடியோ(radio) மற்றும் கீமோதெரபி(chemotherapy) உள்ளிட்டவை அடங்கும்.

Q

சருமப் புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய சாத்தியமான அபாயங்கள் என்னென்ன?

A

பெரும்பாலான சிகிச்சை நடைமுறைகள் பாதுகாப்பானவை என்றாலும்கூட, குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகள் ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, சிகிச்சை அளிக்கும் சரும பாதுகாப்பு சிகிச்சையை மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து அதற்கேற்றார்போல பின்பற்றுவது நல்லது.

Q

எதிர்காலத்தில் சருமப் புற்றுநோயின் பாதிப்புகளைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

A

சருமப் புற்றுநோயின் முழுமையான தடுப்பு என்பது சாத்தியமற்றது. இருப்பினும் சருமப் புற்றுநோய் ஆபத்தில் உள்ளவர்கள் அதனுடைய வீரியத்தைக் குறைக்க மருத்துவரிடம் அவ்வப்போது ஸ்கிரீனிங் செய்ய வேண்டியது அவசியமாகும்.

Summer
Summer
Q

கோடைக்காலத்தில் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?

A
  • ஒரு நல்ல சன்ஸ்கிரீன் (SPF >/=30, PA 3+ உடன் பரந்த ஸ்பெக்ட்ரம்) தேர்வு செய்து அதை தாராளமாக உடலில் (சருமம்) வெளிப்படும் பகுதிகளில் பயன்படுத்துவது.

  • பரந்த விளிம்பு கொண்ட தொப்பி, முகத்திற்கு முகமூடி மற்றும் கையுறை அணிவது.

  • போதுமான நீரேற்றம்.

  • காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நேரடியாக சூரிய ஒளியில் படுவதைத் தவிர்ப்பது அவசியம்.

  • ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவு அருந்துவது.

Q

எந்த வகையான சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது? எத்தனை முறை அதனைப் பயன்படுத்த வேண்டும்?

A

சன்ஸ்கிரீன் ஃபார்முலாவை சருமத்தின் வகைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், இது ஜெல், கிரீம், லோஷன், ஸ்ப்ரே, குச்சிகள் மற்றும் வாய்வழி மாத்திரைகள் போன்ற வகைகளிலும் கிடைக்கின்றன. குறிப்பாக PA 3+ நிறைந்த அதில் காமெடோஜெனிக் சூத்திரம் அல்லாத ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீன் சருமத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

Q

கோடையில் சூரிய வெளிச்சம் சருமப் புற்றுநோயின் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறது?

A

பொதுவாக ஒரு தொடர்ச்சியான வெளிப்பாட்டைக் காட்டிலும் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தில் புற ஊதா ஒளியை அவ்வப்போது வெளிப்படுத்துவது அதிகம். இது உடலில் ஏற்படக்கூடிய சருமப் புற்றுநோயுடன் தொடர்புடையது. சரும வகைகளில் லேசான சருமம் வெயிலுக்கு ஆளாகும்போது அது சருமப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

Q

கோடை மாதங்களில் உடலில் உள்ள மச்சங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

A

நிறம், அளவு, நிலைத்தன்மை ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் உடலில்  ஏற்பட்டால் சந்தேகம் எழ வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப் பெற்று, தேவைப்பட்டால் பயாப்ஸி செய்யப்பட வேண்டும்.

Beauty products
Beauty products
Q

சருமத்தில் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் வருமா?

A

OTC தயாரிப்புகளில் உள்ள ஒரு சில அழகு சாதனப் பொருட்கள் புற்றுநோய்களுடன் தொடர்புடையவை. எனவே இது தொடர்பான ஆபத்தை சரிபார்க்க உங்கள் சரும மருத்துவரை அணுகும்படி அறிவுறுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com