கஷ்டப்பட்டு புகைப் பழக்கத்தை விட்டாலும் கூட இதய ஆரோக்கியம் மீண்டும் சீராக பல ஆண்டுகளாகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
புகைப்பழக்கம் மது பழக்கம் ஆகியவை நமது உடல் நலத்திற்கு கேடு என்பது நம் அனைவருக்குமே தெரியும். தெரிந்தும் அந்த பழக்கத்தைவிட முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம். சமீபத்தில்கூட ஷாருக்கான் தனது புகைப் பழக்கத்தை விட்டுவிட்டதாக கூறியிருந்தார். அவர் இதற்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பதாக கூறினார்.
இப்படி சிகரெட் பழக்கத்தை கஷ்டப்பட்டு நிறுத்துபவர்கள் ஏராளம். ஆனால், அப்படி நிறுத்தினாலுமே மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல காலங்கள் ஆகும்.
புகைப்பழக்கம் அதிகம் இல்லாதவர்கள் புகைப் பிடிப்பதை நிறுத்தினால் இதய ஆரோக்கியம் இயல்பு நிலைக்கு வர 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வு கூறுகிறது. அதிகம் புகைப்பிடிப்பவர்கள், அதாவது ஒரு நாளைக்கு மட்டும் கணக்கில் வைத்துக்கொள்ளாத அளவிற்கு புகைப்பிடிப்பவர்களின் இதய ஆரோக்கியம் முழுவதும் குணமாக 25 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறது புதிய ஆய்வு ஒன்று.
Smoking and cardiovascular disease (CVD) இரண்டுக்குமான தொடர்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இலேசான புகைப்பிடிப்பவர்களுக்கும் சிவிடி ஆபத்து உள்ளது. ஆனால் இவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தினால்கூட ஒப்பீட்டளவில் புகைப்பிடிக்காதவர்களுக்கு இருக்கும் அதே ஆரோக்கியம் தான் இருக்குமாம். ஆனால், அதிகம் புகைப்பிடித்தவர்கள் புகைப்பிடிக்காதவர்களின் ஆரோக்கிய நிலை அடைய 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகுமாம்.
புகைப்பழக்கம் உடையவர்கள் முழுமையாக 1 வருடம் நிறுத்திவிட்டால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.
திடீர் இதய செயலிழப்பு, சிரை த்ரோம்போம்போலிசம் மற்றும் புற தமனி நோய் அபாயம் ஆகியவை குறைகிறது. இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற சுவாச அறிகுறிகளை குறைக்கிறது. மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா போன்ற சுவாச தொற்றுகளை குறைக்கிறது.
மேலும் ஒரு வருடத்திற்கு மேல் இன்னும் குறைக்கும்போது இன்னும் பல நல்ல மாற்றங்களை காண முடியும். ஆனால், புகைப்பிடிக்காதவர்களின் இதய ஆரோக்கியம்போல் மாற முழுமையாக 25 ஆண்டுகள் என்பதுதான் ஆய்வில் தெரியவந்தது.
இனி அந்தப் பழக்கத்தை ஆரம்பிக்கும்போதே இவற்றை மனதில்கொண்டு புகைப்பிடிக்கும் பழக்கத்தின் பக்கமே போகாதீர்கள்.