உங்கள் செரிமான அமைப்பு எப்படி வேலை செய்கிறது தெரியுமா? 

Digestive system
How our digestive system works?
Published on

மனிதர்களின் செரிமான அமைப்பு ஒரு அற்புதமான இயந்திரம். இது உணவை உட்கொள்வதில் இருந்து, அதிலிருந்து பயனுள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, கழிவுகளை வெளியேற்றுவது வரை பல படிகளை உள்ளடக்கியது. இந்தப் பதிவில் மனிதர்களின் செரிமான அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம். 

உணவுப் பாதை: மனிதர்களின் செரிமான அமைப்பு உணவுப் பாதை என்று அழைக்கப்படும் ஒரு நீண்ட குழாயாகும். இந்த பாதை வாயிலிருந்து தொடங்கி குடல் வழியாக சென்று ஆசனவாய் வரை நீண்டுள்ளது. இந்தப் பாதையில் உணவு செல்லும்போது பல்வேறு செரிமான சுரப்பிகள் மற்றும் உறுப்புகள் அதனுடன் இணைந்து செயல்பட்டு, உணவை சிதைத்து அதிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகின்றன. 

செரிமானத்தின் செயல்பாடுகள்: 

  • வாய்: செரிமானம் வாயிலிருந்து தொடங்குகிறது. பற்கள் உணவ நன்றாக மென்று சிறு சிறு துண்டுகளாக மாற்றுகின்றன. நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் உணவின் சுவையை அடையாளம் காண்கின்ற. உமிழ்நீர் சுரப்பிகள் உமிழ்நீரைச் சுரந்து உணவை சிதைக்க உதவுகிறது. 

  • உணவுக் குழாய்: வாயில் மென்ற உணவுகள் உணவுக் குழாயின் வழியாக பயணித்து வயிற்றுக்கு செல்கிறது. 

  • வயிறு: வயிறு ஒரு பை போன்றது. இது உணவை சேமித்து வைத்து அதை மேலும் சிதைக்கிறது. வயிற்றில் உள்ள அமிலம் மற்றும் என்சைம்கள் புரதங்களை சிதைக்கின்றன. 

  • சிறுகுடல்: வயிற்றிலிருந்து உணவு சிறுகுடலுக்கு செல்கிறது. சிறுகுடல் நீளமான குழாய் போன்றது என்பதால் இது உணவை மேலும் சிதைத்து அதிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகிறது. கல்லீரல் மற்றும் கணையம் சிறுகுடலில் செரிமானத்திற்கு உதவும் சாறுகளை சுரக்கின்றன. 

  • பெருங்குடல்: சிறுகுடலில் இருந்து உறிஞ்சப்படாத உணவுப் பொருட்கள் பெருங்குடலுக்கு செல்கின்றன. பெருங்குடல் நீரை உறிஞ்சி மலத்தை திடப்படுத்துகிறது. 

  • ஆசனவாய்: இறுதியாக, ஆசனவாய் வழியாக மலம் வெளியேற்றப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
செரிமான சக்தி சீராக இருக்க கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கம்!
Digestive system

மேலே, குறிப்பிட்ட அமைப்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் போதுதான் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அல்சர் போன்றவை சில பொதுவான செரிமானப் பிரச்சனைகளாகும். தவறான உணவுப் பழக்கங்கள், அழற்சி நோய்கள், பாக்டீரியா தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். 

மனிதர்களின் செரிமான அமைப்பு சிக்கல்கள் நிறைந்த ஒரு அற்புதமான செயல்முறையாகும். நாம் உண்ணும் உணவுகள் நம் உடலின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றன. எனவே, ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்க சரியான உணவுப் பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com