சரும ஆரோக்கியம்: நீங்கள் தரமான சோப்பைத்தான் உபயோகிக்கிறீர்களா?

Quality of soap
Soap PH test
Published on

சோப்பு என்றால் சிலருக்கு முதலில் ஞாபகம் வருவது நறுமணம். இன்னும் சிலருக்கு அதன் மூலம் கிடைக்கும் ஓர் புத்துணர்ச்சி. சரி, இவை இருந்தால் மட்டும் அது தரமான சோப்பாக ஆகிவிடுமா? சோப்பிற்கான தரச்சான்றுபடி இந்தியாவில் நம் சரும பராமரிப்புக்கு ஏற்ற உயர்தர சோப்பைத் தேர்ந்தெடுப்பது, அதில் உள்ள மூலப்பொருட்களின் தொகுப்பு, என இரண்டையும் புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது.

இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards) அதன் சான்றிதழ் மூலம் சோப்பு தரத்தை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் சோப்புகள் இந்திய தரநிலை IS 134:1991 உடன் இணங்க வேண்டும். pH சமநிலை, பயன்படுத்தியுள்ள கொழுப்பு பொருள் (total fatty matter(TFM), அனுமதிக்கப்பட்ட சில சேர்க்கைகள்(permissible additives) என்று குளியலறையில் உபயோகப்படுத்தும் சோப்புகளுக்கான விவரக்குறிப்புகளை கோடிட்டுக் காட்டுகிறது.

இதோடு மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation) மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 இன் கீழ் அழகு சாதன பொருட்களை வகைப்படுத்துகின்றன.

இதற்கான உரிமங்களைப் உற்பத்தியாளர்கள் முதலில் பெற வேண்டும். பின் நுகர்வோரைச் சென்றடைவதற்கு முன்பு தங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்கிறதா? என்பதை உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளன.

சோப்பில் கட்டாயம் இருக்க வேண்டியவை கடுமையான சல்பேட்டுகள் (harsh sulfates), பாரபென்கள்(parabens) அல்லது செயற்கை வாசனை திரவியங்கள் கொண்ட சோப்புகளைத் தவிர்த்திடுங்கள். அவை சில நேரத்தில் சருமத்தில் எரிச்சல் உண்டாகலாம்.

நம் சருமத்திற்கு ஏற்ற சோப்பில் கண்டிப்பாக சுத்திகரிப்பு, ஊட்டமளிக்கும் பொருட்களின் (nourishing ingredients)கலவை இருக்க வேண்டும். அதன் கலவையில் தேங்காய், ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்கள் இருக்க வேண்டும். அவைதான் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகின்றன. பின் அந்த ஈரப்பதத்தைத் தக்கவைக்க கிளிசரின் அவசியம். அதே நேரத்தில் தேயிலை மர எண்ணெய், வேம்பு, மஞ்சள், கற்றாழை போன்ற பொருட்கள்; நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு நன்மைகளை வழங்குகின்றன.

சோப்பில் TFM மதிப்பு (76% க்கு மேல்) உள்ளது என்றால் அது உயர்ந்த தரத்தை குறிக்கக்கூடியது; இது சிறந்த சுத்திகரிப்பு, ஈரப்பதமூட்டும் பண்புகளைத் தரக்கூடியது.

இது உங்களுக்கான நேரம் வீட்டிலேயே சோப்பின் தரத்தை மதிப்பிடுவதற்கு எளிய சோதனைகளைச் செய்யலாம். ஆன்லைனில் சுலபமாக கிடைக்கும் லிட்மஸ் பேப்பர்(litmus paper) அல்லது pH கிட் போன்றவற்றை பயன்படுத்தி pH சோதனை செய்வது சோப்பு சருமத்திற்கு உகந்ததா? என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது. சிறந்த சோப்பு pH 5.5 முதல் 7.5 வரை இருக்கும்.

இதையும் படியுங்கள்:
தலைக்கு ஒரு பாதுகாப்பு கவசம் - ரொம்ப ரொம்ப அவசியம்!
Quality of soap

நீங்கள் நுரை சம்பந்தமாகவும் சில சோதனைகளை நடத்தலாம். சிறந்த சோப்புகள் கடின நீரில் (Hard water) கூட அதிக கிரீமி நுரையை உருவாக்கும்.

சோதனைக்கான மற்றொரு முறை எண்ணெய் சோதனை(oil residue test). குளித்தபின் உங்கள் தோல் மென்மையாகவும், உரிக்கப்படாமலும் இருந்தால் சோப்பில் நன்மை பயக்கும் விஷயங்கள் இருக்கலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த சரும மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com