இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

இரு முனைக்கோளாறு
bipolar disorderhttps://ananda.ai

மீபத்தில் வெளியான ஜே.பேபி திரைப்படத்தில் அதன் நாயகி ஊர்வசி, ‘பை போலார்’ எனப்படும் இருமுனைக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு அதன் விளைவால் பல சங்கடங்களை அனுபவிப்பார். இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

இருமுனைக் கோளாறின் அறிகுறிகள்: பொதுவாக, ஆண்களை விட பெண்களுக்கு பை போலார் எனப்படும் இரு முனைக்கோளாறு எனப்படும் குறைபாடு ஏற்படுகிறது. இது குழந்தை பருவத்திலும் வளர்இளம் பருவத்திலும் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் ஏற்படலாம்.

1. பெரும்பாலான நேரங்களில் சோகமாக, நம்பிக்கையற்றவராக, எரிச்சலாக உணர்வது.

2. உடலிலும் மனதிலும் ஆற்றல் இல்லாதது போன்ற உணர்வு.

3. எந்த விஷயத்திலும் கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் நினைவாற்றலில் கோளாறு.

4. அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வம் இழப்பு ஏற்படுதல்.

5. மனதில் வெறுமை சூழ்தல்.

6. குற்ற உணர்வு மற்றும் அவநம்பிக்கை.

7. சுய சந்தேகம், பிறரின் மேல் ஏற்படும் அவநம்பிக்கை.

8. மாயத் தோற்றம், பசியின்மை, தூங்குவதில் சிரமம், தற்கொலை எண்ணங்கள்.

9. இந்த நோய் தீவிரமாகும்போது பாதிக்கப்பட்ட நோயாளி மிகவும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக உணர்வார். அதிகமான ஆற்றல் மற்றும் பரவச உணர்வை அடைவார்.

10. அதேசமயம். மனச்சோர்வு தீவிரமாவது, விரைவாக பேசுதல், தேவையில்லாமல் பெரும் செலவுகளை செய்வது, இயல்புக்கு மாறான விஷயங்களைப் பற்றி பேசுவது, பிறருக்குத் தீங்கு விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதற்கிடையில் சில சமயங்களில் சாதாரண மனநிலையிலும் இருப்பார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்று சில சமயத்தில் தெரியாமல் போகலாம்.

சிகிச்சை முறைகள்: மனநல ஆலோசகரின் உதவியை நாடி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, சீரான ஊட்டச்சத்து, போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை சரியாக நிர்வகிப்பதன் மூலம் வாழ்க்கை முறையை மாற்றலாம். இதற்கு குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினரின் ஆதரவு அவசியம்.

மனநிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் உணவுகள்: சத்தான காய்கறிகள், நோய் எதிர்ப்பு சக்தியை தரும் பழ வகைகள், முழு தானியங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் வகைகள், கொட்டை மற்றும் விதைகள், கீரை வகைகள், புரதம் நிறைந்த முட்டை, பருப்பு வகைகள், புரோபயாடிக் நிறைந்த தயிர், டார்க் சாக்லேட்டுகள், மஞ்சள், இஞ்சி, பட்டை, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருள்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். போதிய அளவு நீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com