ஹைட்ரோனெபிரோசிஸ்: அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை!

Hydronephrosis: Symptoms, Causes and Treatment
Hydronephrosis: Symptoms, Causes and Treatmenthttps://tamil.boldsky.com

சிறுநீரக பாதிப்புகளால் சிகிச்சை எடுப்பவர்களை அதிக அளவில் தற்காலத்தில் பார்க்கிறோம். சிறுநீரக நீர்க்கோர்வை எனப்படும் இந்த ஹைட்ரோனெபிரோசிஸ் பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம்!

நமது உடலில் அன்றாடம் நாம் எடுக்கும் உணவு மூலம் சேரும் கழிவுப்பொருட்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுவதற்கு சிறுநீரகங்கள் உதவுகின்றன. இதில் ஏதேனும் அடைப்பு அல்லது ஏற்படும் பிற பிரச்னைகள் நிரந்தர சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். மேலும், சிறுநீரகங்கள் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் பணியை செய்ய முடியாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிறுநீரகத்தில் சிறுநீர் சேர்ந்து ஹைட்ரோனெபிரோசிஸ் ஏற்படக் காரணமாகிறது.

ஹைட்ரோனெபிரோசிஸ் என்பது சிறுநீர் குவிவதால் உண்டாகும் சிறுநீரகங்களின் வீக்கத்தைக் குறிக்கிறது. இது பல வகைகளைக் கொண்டுள்ளது மற்றும் எந்த வயதிலும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைட்ரோனெபிரோசிஸ் ஏற்பட முக்கியக் காரணங்களாக பல இருந்தாலும் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கடத்தும் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே இதற்கு முதன்மைக் காரணம் ஆகிறது. அடைப்பு காரணமாக சிறுநீர் குவிந்து சிறுநீரகத்தின் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.

ஹைட்ரோனெபிரோசிஸின் அறிகுறிகள் இவைதான். வீக்கம் தீவிரமாக ஏற்படுகிறதா அல்லது படிப்படியாக முன்னேறுகிறதா என்பதைப் பொறுத்து அறிகுறிகளும் இருக்கும். கடுமையான அடைப்பாக இருந்தால், குமட்டல், வலி மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். கடுமையான ஹைட்ரோனெப்ரோஸிஸ் என்றால் பக்கவாட்டிலும் முதுகு அல்லது வயிறு மற்றும் இடுப்புப் பகுதியிலும் திடீர் வலி தோன்றும். சிறுநீர் கழிக்கும்போதும் வலி ஏற்படலாம். சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதல் அதிகமாகும். சிறுநீரில் இரத்தம், குமட்டல், வாந்தி, காய்ச்சல் மற்றும் பலவீனம் ஆகியவை ஏற்படும்.

பெரும்பாலும் எந்த குறிப்பிட்ட அறிகுறிகளையும் காட்டாமல் காலப்போக்கில் உருவாகும் நாள்பட்ட ஹைட்ரோனெபிரோசிஸ் நோயாளிக்கு சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளைத் தரலாம் மற்றும் உடல்நலக் குறைவு, பலவீனம், மார்பு வலி, கால் வீக்கம், மூச்சுத் திணறல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றையும் ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
சங்கடஹர சதுர்த்தி தோன்றிய வரலாறு தெரியுமா?
Hydronephrosis: Symptoms, Causes and Treatment

ஹைட்ரோனெபிரோசிஸை எவ்வாறு சரிசெய்வது அல்லது எப்படி சிகிச்சையளிப்பது என்ற கவலைகள் வேண்டாம். இதற்கான அறிகுறிகள் கண்டவுடன் மருத்துவரை உடனே அணுக வேண்டும். பரிசோதனைகள் மூலம் மருத்துவர் காரணத்தைக் கண்டறிந்து அதன் தீவிரத் தன்மையைப் பொறுத்து மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிப்பார். ஆனால், இதை அலட்சியமாகக் கருதி சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தால் நிரந்தர சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்புக்கு வழிவகுக்கும் அபாயமுண்டு.

சிறுநீரக பாதிப்பின்போது மருத்துவரின் ஆலோசனைப்படி  சிறுநீரகத்திற்கு ஏற்ற உணவு முறையை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, அடர் நிற சோடாக்கள், பழுப்பு அரிசி, வாழைப்பழங்கள், ஆரஞ்சு, பால் பொருட்கள் போன்ற பொட்டாசியம் அதிகம் உள்ளவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் அதிக உப்பு உடைய மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com