ஹைப்பர்ஹிட்ரோஸிஸ் - காரணங்களும் தீர்வுகளும்!

Hyperhidrosis - Causes and Remedies
Hyperhidrosis - Causes and Remedieshttps://neutralbaydermatology.com

ம் உடல் நலனுக்கும் வியர்வைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உடல் உஷ்ணம்தான் வியர்வை சுரப்பிகள் வழியாக திரவ வடிவில் வெளியேறுகிறது. பயம், பதற்றம், புழுக்கம் போன்ற நேரங்களில் இந்த சுரப்பிகள் வேகமாக செயல்பட்டு எப்போதும் வியர்த்துக் கொண்டே இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால், அக்குள் போன்ற பகுதிகள் ஈரமாகவே காணப்படும். இந்த பிரச்னையைத்தான், ‘ஹைப்பர்ஹிட்ரோஸிஸ்’ என அழைக்கின்றார்கள்.

சிலருக்கு கைகளிலும் கால்களிலும் வியர்வை அதிகமாக ஏற்படும். அதிலும் குறிப்பாக பதற்றமாக இருக்கும்போது வியர்வை அதிகமாகும். இது சிலருக்கு பரம்பரையாக ஏற்படும். இன்னும் சிலருக்கு பருவ வயதை அடையும்போது ஏற்படும் மாற்றங்களால் உண்டாகும். இவை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தானாகவே சரியாகிவிடும்.

அதிகப்படியான வேலை மற்றும் ஸ்ட்ரெஸ் காரணமாகவும் இது உண்டாகும். இவை அதிக வியர்வை காரணமாக சரும  பிரச்னைகளை உண்டுபண்ணும். ஹைப்பர் ஹிட்ரோஸிஸ் இருப்பவர்களின் வியர்வை சுரப்பிகள் காரணமே இல்லாமல் நரம்பு மண்டலத்தால் அதிகமாக தூண்டப்பட்டு வியர்வை உண்டாகும். இவற்றை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும் ஓரளவுக்குக் குறைக்க முடியும்.

தீர்வுகள்:

1. கைகளையும் கால்களையும் சோப்பு மற்றும் தண்ணீரால் எப்போதும் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

2. ஆன்டிபெர்ஸ்பிரண்ட் எனப்படும்  வியர்வை எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்த ஓரளவு வியர்வையை குறைக்க முடியும்.

3. கேன்வாஸ் காலணிகளைப் பயன்படுத்த அவை ஈரப்பதத்தை குறைப்பதுடன் கால்களை காற்றோட்டத்துடன் வைத்துக்கொள்ள உதவும்.

4. ஈரப்பதத்தை உறிஞ்சும் வகையில் உள்ள காலுறைகளை அணிவது அதிகப்படியான வியர்வையை உறிஞ்சுவதுடன் கால்களை உலர்வாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

5. டால்கம் பவுடரை கை, கால்களுக்கு உபயோகிக்க அவை ஈரப்பதத்தை உறிஞ்சுவதுடன் துர்நாற்றம் ஏற்படாமலும் தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
நவபாஷாண நவக்கிரக கோயில் எங்கே இருக்கிறது தெரியுமா?
Hyperhidrosis - Causes and Remedies

6. தினமும் 20 நிமிடங்கள் பிளாக் டீயில் கை, கால்களை ஊற வைக்கவும். இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் விளைவை கொண்ட டானின்கள் இதில் இருப்பதால் வியர்வையை குறைக்க உதவும்.

7. இதற்கு பாட்டி வைத்தியமாக சிறிதளவு கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கரைத்து வியர்வை அதிகமாக வரும் இடங்களில் தடவி வரலாம்.

8. நாள்தோறும் தக்காளி பழச்சாறு, திராட்சைப் பழம் சிறிதளவு சாப்பிட்டு வந்தாலும் அதிக வியர்வை சுரப்பை கட்டுப்படுத்தலாம்.

9. பதற்றத்தையும் ஸ்ட்ரெஸையும் குறைக்கும் யோகா, தியானம் போன்றவற்றை செய்ய அதிகப்படியான வியர்வை சுரப்பது குறையும்.

மேற்கண்ட எதற்கும் இந்தப் பிரச்னை தீரவில்லை என்றால் அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com