ஆண்களுக்கு இந்த 8 அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை… சாதாரணமா நினைக்காதீங்க!

Male Health Issue
If men have these 8 signs, beware

ஆண்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்து பெரும்பாலும் கவனக்குறைவாகவே இருக்கிறார்கள். சிறிய உடல் அறிகுறிகளை புறக்கணித்து தங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். அனல் சில அறிகுறிகள் ஆண்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக இருப்பதால் அவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 

இந்தப் பதிவில் ஆண்கள் தவிர்க்கக் கூடாத முக்கிய உடல் அறிகுறிகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

  1. மார்பு வலி: மார்பு வலி இதய நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். திடீரென ஏற்படும் மார்பு வலி, அழுத்தம் அல்லது இருக்கம், கைகள், தாடைகள், தோள்பட்டைகள் போன்ற பகுதிகளுக்கு பரவும் வழி மூச்சுத்திணறல் ஆகியவை இதில் அடங்கும். இதய வால்வு நோய், மாரடைப்பு, இதய தசை பலவீனம் போன்ற காரணங்களால் இது ஏற்படலாம். 

  2. சுவாசப் பிரச்சினைகள்: மூச்சுத்திணறல், மார்பு வலி, இருமல், சளி போன்றவை சுவாசப் பிரச்சனைகளின் அறிகுறிகள். ஆஸ்துமா, நுரையீரல் அலர்ஜி, நுரையீரல் புற்றுநோய் போன்ற காரணங்களால் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படலாம். 

  3. சோர்வு: அளவுக்கு அதிகமான சோர்வு, தினசரி எந்த வேலைகளையும் செய்ய முடியாமல் போதல், பலவீனம் ஆகியவை ஆண்களுக்கு ஏற்படும் மிகவும் முக்கியமான அறிகுறிகள். ரத்த சோகை தைராய்டு பிரச்சனைகள் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் இது ஏற்படலாம். 

  4. உடல் எடை மாற்றம்: திடீரென உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். நீரிழிவு, தைராய்டு பிரச்சனைகள், புற்றுநோய் போன்ற காரணங்களால் இது ஏற்படலாம்.

  5. செரிமான பிரச்சனைகள்: வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்றவை செரிமானப் பிரச்சனைகளின் அறிகுறிகள். இரைப்பையில் புண், குடல் அழற்சி, உணவு ஒவ்வாமை போன்ற காரணங்களால் இத்தகைய அறிகுறிகள் ஏற்படும். 

  6. சிறுநீர் கழிப்பதில் பிரச்சனைகள்: அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது வலி, சிறுநீர் அடக்க முடியாமை போன்றவை சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப்பை தொற்று, புற்றுநோய் போன்ற காரணங்களால் ஏற்படும் வாய்ப்புள்ளது.

  7. தூக்கமின்மை: போதுமான அளவு தூங்க முடியாமல் தினசரி சோர்வாக இருப்பது எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போவது போன்றவை தூக்கமின்மையின் அறிகுறிகள். மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற காரணங்களால் இது ஏற்படலாம். 

  8. தோல் மாற்றங்கள்: சருமத்தில் திடீரென ஏற்படும் மச்சங்கள், புண்களின் அளவு, வடிவம், நிறம் மாற்றமடைதல் போன்றவை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். தோளில் அரிப்பு, வீக்கம், சிவந்து போதல் போன்றவை தோல் நோய்களின் அறிகுறிகளாகும். எனவே இவற்றை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. 

இதையும் படியுங்கள்:
வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் மீண்டும் பசிக்குதா? இது எதன் அறிகுறி தெரியுமா? 
Male Health Issue

மேலே குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால் எந்த தாமதமும் இன்றி மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது. ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, அதனால் ஏற்படும் பெரும் பாதிப்புகளைத் தடுக்கும் என்பதால், ஆண்கள் இத்தகைய அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com