முடி உதிர்வை தடுக்க தினமும் இதை சாப்பிட்டுவந்தால் நல்லதாம்!

முடி உதிர்வை தடுக்க தினமும் இதை சாப்பிட்டுவந்தால் நல்லதாம்!
Published on

ம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது கருப்புக் கொண்டக்கடலை. வழக்கமாக இதை வேக வைத்து சாப்பிடுவோம். அதற்கு பதிலாக ஊற வைத்த கருப்பு கொண்டக் கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகளைப் பெறலாம். ஊற வைத்த கருப்புக் கொண்டைக் கடலையில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் பைடோசிந்தெஸிஸ் உள்ளன. இது ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஒரு கைப்பிடி அளவு கருப்புக் கொண்டைக் கடலையை தண்ணீரில் ஊற வையுIகள். அடுத்த நாள் காலை தண்ணீரை வடிகட்டி விட்டு அந்தக் கொண்டைக் கடலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இது உடலுக்கு நல்லது என்பதால் அதிகம் சாப்பிட்டு விடாதீர்கள்.

இதில் புரதச் சத்தும் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளன. ரத்த சோகை உள்ளவர்கள் இதை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கருப்புக் கொண்டைக்கடலையில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தை அது மேம்படுத்தும். மேலும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, செரிமானப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தொடர்ந்து இப்படிச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாது.

இதயத்தை வலுப்படுத்தி, இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், ரத்தம் உறையாமல் தடுக்கும் மினரல்கள் ஊற வைத்த கருப்புக் கொண்டைக் கடலையில் உள்ளன. இது உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. இதை கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிவிடும். தேவையில்லாத நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது குறையும். மேலும், நம் உடலில் உள்ள பித்த அமிலத்தை கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவையும் சீராக்குகிறது.

ஊற வைத்த கருப்பு கொண்டைக் கடலையை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள புரதங்கள் முடிக்கால்களை பலப்படுத்தி, உதிராமல் பாதுகாக்குமாம். அதுமட்டுமின்றி, முடிகள் விரைவில் நரைப்பதையும் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com