முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

Health benefits of radish juice
Health benefits of radish juice
Published on

முள்ளங்கியை வைத்து சாம்பார், கூட்டு செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், முள்ளங்கியைப் பயன்படுத்தி ஜூஸ் போட்டு குடித்திருக்கிறீர்களா? விலை மலிவான காய்கறியான முள்ளங்கியில் இத்தனை பலன்கள் இருக்கிறதா? என்று நம்மை ஆச்சர்யப்பட வைக்கும் அளவிற்கு இதில் எண்ணற்ற பலன்கள் உள்ளன. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

முள்ளங்கியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம் என்று எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.

தினமும் முள்ளங்கி ஜூஸ் குடிப்பதால், அதிலுள்ள வைட்டமின் சி, பாஸ்பரஸ் சத்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சரும வறட்சி, பருக்கள், ஆக்னே, பிக்மெண்டேஷன் ஆகியவற்றை சரிசெய்கிறது. முள்ளங்கியை பேஸ்டாக அரைத்து தலையில் தடவுவதால், பொடுகு, முடி உதிர்தல் குணமாகும். முள்ளங்கியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ உள்ளதால், சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

முள்ளங்கி ஜூஸ் தினமும் குடித்து வர உடலில் ஏற்படும் நீரிழப்பை சரிசெய்து, சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கிறது. முள்ளங்கி ஜூஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், அசிடிட்டி,  குமட்டல், வாய்வுப் பிரச்னைகளை குணப்படுத்துகிறது.

முள்ளங்கியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், தினமும் முள்ளங்கி ஜூஸ் குடித்து வர இருமல், ஜுரம், சளி போன்ற பிச்னைகளைத் தீர்த்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ஆயுர்வேதத்தின்படி, முள்ளங்கி உடலுக்கு குளிர்ச்சியை தருவதாக சொல்லப்படுகிறது. இதில் அதிகமாக பொட்டாசியம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்தம் சீராக ஓடுவதற்கு உதவுகிறது. முள்ளங்கியில் Anthocyanins அதிகமாக உள்ளது. இது இதயத்தை சரியாக செயல்பட உதவுவதோடு, இதய சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கிறது.

இதையும் படியுங்கள்:
தினமும் குல்கந்து சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்!
Health benefits of radish juice

முள்ளங்கியை தினமும் சாலட்டில் சேர்த்து காலையில் சாப்பிடலாம். இதில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால், செரிமானத்திற்கு உதவுகிறது. உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்கள் பாதிப்படைவதைத் தடுத்து இரத்தத்தில் ஆக்சிஜன் அதிகரிக்க உதவுகிறது.

முள்ளங்கியில் கலோரி மற்றும் கார்போஹைடரேட் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இதில் தண்ணீர் அதிகமாக இருப்பதால், உணவு சாப்பிட்ட முழு திருப்தியை கொடுத்து அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது. எனவே, தினமும் காலையில் ஒரு கிளாஸ் முள்ளங்கி ஜூஸ் குடித்து வர, அதன் பலன்களைக் கண்கூடாகக் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com