பற்கள் முத்து போல் பிரகாசிக்க முக்கியமான யோசனைகள்!

Healthy Tooth
Healthy Tooth
Published on

நாம் உண்ணும் உணவுகளின் செரிமானத்திற்கும் நம் பற்களுக்கும் நிறைய தொடர்புள்ளது. நாம் உண்ணும் உணவை உமிழ்நீருடன் சேர்த்து நன்கு மென்று வயிற்றுக்குள்  அனுப்பினால் இரைப்பையின் வேலை சுலபமாகிறது. எனவே, பற்களின் ஆரோக்கியத்திற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

இயற்கையான முறையில் பற்களை பாக்டீரியாக்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கவும், ஈறுகளின் பலத்திற்கும், வாய் சுகாதாரத்திற்கும், வேப்ப மர குச்சி ஒன்றின் முனையை பற்களால் மென்று பிரஷ்ஷாக்கி அதை வைத்து வாரத்தில் ஒன்றிரண்டு முறையாவது பல் துலக்குவது பற்களுக்கு சிறந்த பலன் தரும்.

கோகநட் ஷெல் (சிரட்டை)லை எரித்து, கரியை தூளாக்கி, கல்லுப்புடன் சேர்த்து வாரம் ஒருமுறை பல் துலக்கினால், பற்களில் படர்ந்திருக்கும் கறை நீங்கி, நச்சுக்கள் வெளியேறி பற்கள் பளபளவென்று மின்னும்.

மஞ்சளை பேஸ்ட்டாக அரைத்து, பற்களிலும் ஈறுகளிலும் தடவி 5 முதல் 10 நிமிடம் கழித்து கழுவி விட, அதில் (மஞ்சளில்) அடங்கியுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களும், அதன் கெட்ட  பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் குணமும், பற்கறைகளை நீக்கி வீக்கத்தைக் குறைத்து ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடும் குணம் கொண்ட துளசியை நசுக்கி பற்களிடையில் வைத்தெடுக்க, பற்கள் வெண்மையாவதுடன் வாய் சுகாதாரமும் பெறுகிறது. துளசியைப் போல் ஸ்ட்ராபெரி பழத்தையும் நசுக்கி வாய்க்குள் வைத்திருக்க, அதிலுள்ள மாலிக் அமிலம் பற்களின் கறையை நீக்கி சுத்தமாக்கும். கற்பூரவல்லி இலைகளையும் இதே முறையில் உபயோகிக்க பற்களிடையே வளரும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து பற்களை வெண்மையாக்கும். பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளுக்கும் லவங்கத்தை வாய்க்குள் அடக்கிக்கொள்ள தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
உலர் கருப்பு திராட்சையில் உள்ளது ஓராயிரம் பலன்கள்!
Healthy Tooth

பண்டிகைக் காலங்களில் பலவிதமான இனிப்பு வகைகளை தொடர்ந்து அதிகளவில் சாப்பிட்டுக்கொண்டிருப்போம். இனிப்புகளில் உள்ள அதிக அளவு சர்க்கரையானது பற்களிடையே தங்க நேரும்போது, நச்சு பாக்டீரியாக்கள் உருவாகி, வளர்ந்து, பெருகி பற்சிதைவையும், வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்கும். இவற்றைத் தடுக்க ஒவ்வொரு முறையும் எதையாவது சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிப்பது அவசியம். சூயிங்கத்தை வாயில் போட்டு மென்றுகொண்டிருப்பதும் நல்ல தீர்வு தரும். சர்க்கரை போடாமல் ஜூஸ் குடிப்பது நல்லது. டென்ச்சர் உபயோகிக்கும் முதியவர்களும் ஒவ்வொரு முறையும் சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிப்பதும், டென்ச்சரை சுத்தம் செய்வதும் அவசியம். நம் உடம்பின் மற்ற அவயவங்களைப் பேணிப் பாதுகாப்பது போல், நம் பற்களையும் பாதுகாத்தால் பலப்பல நன்மைகளைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com