உயிரைக் காக்கும் மருந்து உயிரை எடுக்குமா? திறந்த பின் கவனிக்க வேண்டிய 'Deadly' விஷயங்கள்!

tablets and syrup expiry date
Expiry date of medicine
Published on

நாம் வீட்டில் காய்ச்சல், சளி, இருமல் மருந்துகள் உபயோகிப்போம். ஆனால் அப்படி வாங்கி பயன்படுத்திய பின் மருந்து பாட்டிலை 1 வாரம், 15 நாட்கள் தான் பயன்படுத்தலாம் என நினைப்போம்.

இது குறித்து எங்கள் குடும்ப மருத்துவர் டாக்டர் கயல் சொன்ன தகவல்...

பொதுவாக மருந்துகளுக்கு என்று காலாவதி தேதி (Expiry date of medicine) உள்ளது. இந்த குறிப்பிட்ட தேதியை தாண்டி அந்த மருந்தை பயன்படுத்தக்கூடாது. மேலும் அந்த மருந்து பாட்டில் திறந்த பின் எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்று பார்க்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கிறார்கள். ஆனால், அப்படி தூக்கி எறிய வேண்டிய அவசியம் இல்லை.

மாத்திரைகள் வாங்கும் போது அதில் காலாவதி தேதி வரை நிலையானதாகவே இருக்கும். சில சமயங்களில் மாத்திரைகளை சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கும் போது அதன் தன்மை மாறிவிடும். ஆனால், சிரப் டானிக் மருந்துகளில் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இப்படியான சிரப்புகள் குழந்தைகளுக்கு பக்குவமாக கொடுக்கப்பட வேண்டும்.

1. பாராசிட்டமல் சிரப்

சில ஆய்வுகளின் படி இந்த பாராசிட்டமல் சிரப் மருந்து பாட்டிலை திறந்த பின் 5 அல்லது 6 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு கருதி 3 அல்லது 4 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என்று டாக்டர் கூறுகிறார்.

2. கிரீம், ஜெல்

வலி மற்றும் காயங்களுக்கு பயன்படுத்தும் கிரீம், ஜெல் போன்றவற்றை திறந்த இரண்டு அல்லது மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

3. இன்ஹேலர்

மூச்சுத் திணறலுக்கு பயன்படுத்தும் இன் ஹேலைரை அதன் காலாவதி தேதி வரை பயன்படுத்தலாம்.

4. சத்து மருந்துகள்

விட்டமின் சத்து, இரும்பு சத்து போன்ற மருந்துகளை ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. உபயோகிக்கவும் கூடாது.

5. ஊசிகள்

இன்சுலின் போன்ற ஊசிகளை திறந்து விட்டால் அதை ஒரு மாதம் வரை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.

6.இருமல் காய்ச்சல் மருந்து

பாட்டில் ஏதாவது வித்தியாசமான வாசனை வந்தாலோ, நிறம் மாறினாலோ, தெரியாமல் விரல் பட்டுவிட்டாலும், கிருமிகள் புகுந்து விட்டாேலோ, எறும்புகள் வந்தாலோ, மருந்து திரித்திரியாக இருந்தாலும், அந்த மருந்தை பயன்படுத்தாாமல் தூக்கிப் போட்டு விடலாம்.

இருமல், சளி சிரப் இந்த வகையான சிரப்புகளில் இனிப்புக்காக சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால் 1 அல்லது 3 மாதம் வரை பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இப்படியான அந்த மருந்தை மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர்.

6. பவுடர் வடிவ மருந்துகள்

இந்த வகை மருந்துகள் பவுடரில் நீரை கலந்து விட்டால் ஏழு அல்லது பத்து நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் அந்த மருந்து பாட்டிலிலும் இது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவே நீரை கலக்காமல் உபயோகித்தால் அதன் காலாதி தேதி வரை வைத்து பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
Office Frogging: இது தவளையின் பெயர் அல்ல மக்களே! வேலைக்கு நடுவே ஒரு குட்டி உடற்பயிற்சி!
tablets and syrup expiry date

7. சொட்டு மருந்துகள்

கண், காது, மூக்குக்கு போட வேண்டிய சொட்டு மருந்துகள் கண்களுக்கான சொட்டு மருந்துகளை திறந்து விட்டால் அதை ஒரு மாதம் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காது, மூக்கிற்கு போடும் சொட்டு மருந்துக்கும் இது பொருந்தும்.

எனவே, இதுவரை உங்களுக்கு மருந்து பாட்டில் எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தலாம் என்பது தெரியாமல் இருந்தால் இதனை தெரிந்து கொண்டு இனிமேல் பின்பற்றுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க மருந்துகளின் தரம், காலாவதி தேதிகளை தெரிந்து கொண்டு வாங்கி உபயோகப்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com