இந்த 5 காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

Include these 5 vegetables in your diet.
Include these 5 vegetables in your diet.
Published on

காய்கறிகள் என்றாலே பல வகைகள் உள்ளன. அதில் நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஏற்றது எது என்பதை தேர்ந்தெடுப்பது கடினம். இந்த பதிவில் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த சில காய்கறி வகைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். 

இனிப்பு உருளைக்கிழங்கு - விட்டமின் ஏ சத்தை ஊக்குவிக்கும் பீட்டா கரோட்டின், இனிப்பு உருளைக்கிழங்கில் அதிகமாக உள்ளது. இது தோல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பார்வைக்கு அவசியமாகும். இதில் நார்ச்சத்தும் நிறைந்து இருப்பதால், செரிமானத்திற்கு உதவி புரிகிறது. இது ஒரு ஆக்சிஜனேற்றியாக செயல்பட்டு நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொட்டாசியம் இதில் நிறைந்து காணப்படுகிறது. 

ப்ரோக்கோலி - பார்ப்பதற்கு காலிஃப்ளவர் போலவே தோற்றமளிக்கும் இந்த காய்கறியில் விட்டமின் கே, சி, ஏ போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இவை எலும்புகளுக்கும் இரத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமானவை. இதில் இதயத்திற்கு நன்மை பயக்கும் பொட்டாசியம், ஃபோலேட் தாதுக்கள் உள்ளது. 

பிரஸல்ஸ் முளை - பார்ப்பதற்கு குட்டி முட்டைக்கோஸ் போலவே தோற்றமளிக்கும் இந்த காய்கறியில் விட்டமின் கே மற்றும் சி நிறைந்துள்ளது. இதில் புற்றுநோய் பாதுகாப்பு பண்புகளைக் கொண்ட கலவைகள் இருக்கிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

கீரைகள் - பொதுவாகவே கீரைகள் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியவை. இதில் எல்லாவிதமான விட்டமின் சத்துகளும் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ரத்த உறைதலுக்கு கீரைகள் பெரிதும் உதவுகின்றன. கீரைகளைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் கர்ப்ப காலத்தில் நரம்புக் குழாய் குறைபாடுகள் இருக்காது. ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும் இரும்பும், இதய ஆரோக்கியத்திற்கான பொட்டாசியம் மற்றும் செரிமானத்தை சீர்படுத்தும் நொதிகளும் கீரைகளில் நிறைந்துள்ளது. 

காலே/கேல் - இது மற்றொரு நார்ச்சத்து அதிகம் உள்ள கீரை வகை காய்கறியாகும். குறிப்பாக விட்டமின் கே ஊட்டச்சத்திற்கு இது அறியப்படுகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு இந்த காய்கறியை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் விட்டமின் சி இதில் இருப்பதால் நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் கோலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

இவ்வகை காய்கறிகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com