Acidity பிரச்சனையா? இந்த 5 இயற்கை வீட்டு வைத்தியங்களை முயற்சித்துப் பாருங்கள்! 

 Home Remedies for Acidity
Home Remedies for Acidity
Published on

அசிடிட்டி என்பது ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், மன அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் ஏற்படும் ஒரு பொதுவான செரிமானப் பிரச்சனையாகும். இதற்காக பல மருந்துகள் இருந்தாலும் வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களைப் பயன்படுத்தியே அமிலத்தன்மை பிரச்சனையை நாம் சரி செய்ய முடியும். இந்தப் பதிவில் அமிலத்தன்மையைக் குறைத்து சிறந்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில பயனுள்ள வீட்டு வைத்திய முறைகள் பற்றி பார்க்கலாம். 

துளசி இலைகள்: துளசி இலைகள் நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் அவற்றின் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அவை வயிற்றில் நல்ல விளைவுகளைக் கொண்டு வருவதால், அமிலத்தன்மைக்கு சிறந்த தீர்வாக அமையும். நீங்கள் அசிடிட்டி பிரச்சனையை சந்தித்து வந்தால், இரண்டு மூன்று துளசி இலைகளை அப்படியே பறித்து மெல்லுங்கள் அல்லது சூடான நீரில் போட்டு காய்ச்சி குடியுங்கள். 

சீரக நீர்: சீரகம் அவற்றின் செரிமான நன்மைகளுக்குப் பிரபலமானது. அவை செரிமானத்திற்கு உதவும் நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி அமிலத்தன்மையைத் தடுக்க உதவுகின்றன. ஒரு டீஸ்பூன் சீரக விதைகளை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், அமிலத்தன்மைக்கு விரைவான நிவாரணம் கிடைக்கும். 

மோர்: அசிடிட்டி பிரச்சனைக்கு மோர் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். இது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்கி, செரிமான அமைப்பில் குளிர்ச்சியான விளைவை வழங்குகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து சுவைக்காக ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சீரகத்தூள் சேர்த்து உணவுக்குப்பின் குடித்து வந்தால், அமிலத்தன்மை அறிகுறிகளை நீக்கலாம். 

இஞ்சி: இஞ்சியில் சக்தி வாய்ந்த அழற்ச்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது அமிலத்தன்மையைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்த உதவும். நீங்கள் அசிடிட்டி பிரச்சனையை எதிர்கொண்டால் ஒரு சிறிய துண்டு இஞ்சியை அப்படியே மென்று சாப்பிடுங்கள் அல்லது இஞ்சியை துருவி தண்ணீரில் கொதிக்க வைத்து, இஞ்சி டீ தயாரித்து குடிக்கவும். அசிடிட்டியில் இருந்து விரைவான நிவாரணம் பெற ஒரு ஸ்பூன் தேனில் இஞ்சி சேர்த்து உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். 

இதையும் படியுங்கள்:
Smart People: புத்திசாலிகள் இந்த 5 விஷயங்களைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்! 
 Home Remedies for Acidity

கற்றாழை ஜூஸ்: கற்றாழை ஜூஸ் அதன் குணப்படுத்தும் பண்புகளுக்குப் பெயர் பெற்றது. இது வயிற்றில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவும். அசிடிட்டி அறிகுறிகளைப் போக்க காலை அல்லது உணவுக்கு முன் வெறும் வயிற்றில் சிறிதளவு கற்றாழை ஜூஸ் குடிக்கவும். 

இளநீர்: இளநீர் அமிலத்தன்மைக்கு புத்துணர்ச்சியூட்டும் ஒரு இயற்கையான தீர்வாகும். இது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்க உதவி, உடலுக்கு நீரேற்றத்தை வழங்குகிறது. இதன் மூலமாக செரிமானம் மேம்படுகிறது. வயிற்று பிரச்சனைகளை சரி செய்யவும், அமிலத்தன்மை அறிகுறிகளைத் தடுக்கவும் ஒரு கிளாஸ் இளநீர் குடித்தாலே போதும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com