மில்க் சாக்லேட், ரெகுலர் சாக்லேட்டை விட 'டார்க் சாக்லேட்' நல்லதா?

chocolate
chocolate

டார்க் சாக்லேட்டில் நம்முடைய உடலுக்கு நன்மையளிக்கும் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் இந்த சாக்லேட்டின் சுவை ஒருசிலருக்கு பிடிப்பதில்லை. அதேநேரத்தில் இதனுடைய ஆரோக்கியத்தை நன்கு உணர்ந்தவர்கள்  டார்க் சாக்லேட்டை கண்டிப்பாக சாப்பிடுவார்கள். டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்  என்னென்ன என்பதை வரிசையாக பார்ப்போம்.

சரும ஆரோக்கியத்திற்கான மருந்து:

டார்க் சாக்லேட், நமது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இந்த டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, கால்சியம், தாமிரம், வைட்டமின், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.  

  • டார்க் சாக்லேட்டில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட்கள், நம்முடைய சருமத்தை  புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

  • சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கும் வேலையை டார்க் சாக்லேட் செய்கிறது.

  • நம்முடைய சருமத்தின் இளமையைத் தக்க வைக்க உதவும்.

dark chocolate
dark chocolate

மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தங்களைக் குறைக்கும்:

டார்க் சாக்லேட், மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. டார்க் சாக்லேட்டில் ஃப்ளெவனாய்டுகளும் செரோடோனின், எண்டோர்பின் போன்ற இயற்கையான கலவைகளும் அடங்கியுள்ளன. இந்த கலவைகள் அனைத்தும்  நம்முடைய மன நிலையை மேம்படுத்த உதவும். டார்க் சாக்லேட் (24 கிராம்) உட்கொள்வதன் மூலம் நம்முடைய மன அழுத்தத்தை நம்மால்  குறைக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை சீராக வைக்க டார்க் சாக்லேட் உதவுகிறது. வெள்ளை சாக்லேட்டுடன் ஒப்பிடும்போது இந்த டார்க் சாக்லேட் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதோடு இது, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

உடல் எடையைக் குறைக்க உதவும்:

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் இந்த டார்க் சாக்லேட்டுகளை உட்கொள்வது அவர்களுக்கு நல்ல பலனைத் தரும். ஏனென்றால் இது  உப்பு மற்றும் இனிப்பு உணவுகளை விரும்புவதைக் குறைக்கிறது. மருத்துவ வல்லுநர்கள் டார்க் சாக்லேட்டை, இரவு உணவிற்கு ஐந்து நிமிடங்களுக்குப் பின் தொடர்ந்து சாப்பிடுவதன்மூலம் நாம் அன்றாடம் உண்ணும்  உணவிற்கான பசியை ஐம்பது சதவீதமாகக் நம்மால் குறைக்கமுடியும் என்கின்றனர்.

மூளையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும்

டார்க் சாக்லேட்டில் மூளையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கக்கூடிய  கஃபீன், தியோபுரோமின் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. அதாவது கஃபீன் என்பது  கவனத்தை அதிகரித்து, கவனக்குறைபாடு ஏற்படாமல் தடுக்கும். அதோடு டார்க் சாக்லேட்டில் ஃப்ளெவனாய்டுகளும் அடங்கியுள்ளதால், இது நம்முடைய  மூளையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்கிறது.

இதையும் படியுங்கள்:
சாக்லேட் பிரியர்களா நீங்க? அப்போ ‘சாக்லேட் பாம்’ வீட்டிலேயே செஞ்சி பாருங்க!
chocolate

எலும்புகளுக்கு வலு சேர்க்கும்:

பொதுவாகவே மெக்னீசியம் நிறைந்த உணவுகள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக டார்க் சாக்லேட்டில் உள்ள மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம்முடைய எலும்புகளுக்கு வழு சேர்க்கும்.

இதயத்திற்கு நன்மை தரும் டார்க் சாக்லேட்:

இரத்த அழுத்தம் மற்றும் அதிகமான கொலஸ்ட்ரால் போன்ற காரணங்களால்  இருதய நோய்க்கான அபாயங்கள் அதிகரிக்கின்றன. எனவே டார்க் சாக்லேட்டில் இருக்கும் இந்த ஃபிளாவனாய்டுகள் நம்முடைய  இதயத்தின்  ஆரோக்கியத்தை சரிவர கட்டுக்குள் வைக்க உதவுகிறது. டார்க் சாக்லேட்டின் நன்மைகளை முழுவதுமாக அனுபவிக்க, ஒருவர் 70% கொக்கோ கொண்ட டார்க் சாக்லேட்டை சாப்பிட முயற்சிக்க வேண்டும். மேலும் இது இரவு உணவிற்குப் பிறகு உட்கொள்வது நல்லது. இருப்பினும், தினசரி அளவுக்குள் இதனை உட்கொள்ளவேண்டியதும் அவசியமாகும். ஏனென்றால் தினசரி வரம்பை விட அதிகமாக சாப்பிடுவது உங்கள் உடல் எடையை அதிகரிக்கலாம், குமட்டல் மற்றும் தூக்கமின்மையைக் கூட ஏற்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com