Spinach
Spinach

உங்கள் எடையைக் குறைக்க பச்சைகீரை நல்லதா? அல்லது சிவப்புக் கீரை நல்லதா?

Published on

எடைக் குறைப்பு பயிற்சியில் உள்ளவர்களுக்கு சிவப்புக் கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் ஈ,சி மற்றும் கே போன்றவைகளும் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்பும் உள்ளதால் எடைக் குறைப்புக்கு ஏற்றது‌.

பச்சைக் கீரையை விட சிவப்புக் கீரையில் வைட்டமின் ஏ,பி பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் சிவப்புக் கீரையில் பீடா கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலங்கள் நிறைந்துள்ளன. காய்ச்சல் சளி போன்றவற்றிற்கு நிவாரணமாக உள்ளது.

சிவப்புக் கீரையில் நார்சத்து அதிகம் உள்ளதால் நீண்ட நேரம் பசியைத் தூண்டுவதில்லை. இதனால் தேவையற்ற உணவுகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. காலை நேரம் சிவப்புக் கீரையை சேர்ப்பது நீண்ட நேரம் முழுமையான உணர்வைத் தரும். இதனால் உடல் எடை குறைய வாய்ப்புண்டு.

சிவப்புக் கீரையில் நார்சத்து அதிகம் உள்ளதால் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதனால் செரிமானம் சீராகிறது. இதனால் சிவப்புக் கீரையை அடிக்கடி உட்கொள்வது சிறந்தது.

சிவப்புக் கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. பருவ காலங்களில் ஏற்படக்கூடிய சளி காய்ச்சலை தடுக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இக்கீரையை கொடுப்பதால் நோய்த்தொற்று தடுக்கப்படும்.

இன்று பெரும்பாலான பெண்கள் இரத்த சோதனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இரும்புச் சத்து அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த சிவப்புக் கீரை அதை அளிக்கிறது. உடலில் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்திகரித்து ஆரோக்கியமாக வைக்கிறது.

எலும்பு ஆரோக்கியம் மேம்படுவதற்கு கால்சியம் மிக அவசியம். சிவப்புக் கீரையில் கால்சியம் மற்றும் புரதச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் எலும்பு ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.

தினசரி 100 கிராம் சிவப்புக் கீரையில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களைப் பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
ப்ரோக்கோலி: சிறிய காய்... பெரிய நன்மைகள்!
Spinach
logo
Kalki Online
kalkionline.com