இரவில் இறுக்கமான உடை அணிந்து தூங்கும் நபரா நீங்கள்? போச்சு! 

sleep in tight clothes
Is it OK to sleep in tight clothes at night?
Published on

நாம் அனைவருக்கும் தூக்கத்தின் முக்கியத்துவம் நன்கு தெரியும். தூக்கம் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. நாம் எப்படி தூங்குகிறோம் என்பது நமது தூக்கத்தின் தரத்தை பெரிதும் பாதிக்கிறது. தூங்கும்போது நாம் அணியும் உடைகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இறுக்கமான உடைகளை அணிந்து தூங்குவது  நமது உடல் நலனை பாதிக்குமா? வாருங்கள் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

இறுக்கமாக உடை அணிந்து தூங்குவதன் பாதிப்புகள்: 

இறுக்கமாக உடைகள் அணிந்து தூங்குவது உடலில் ரத்த ஓட்டத்தைக் குறைக்கின்றன. இது தசை வலி, வீக்கம் மற்றும் உணர்ச்சி இழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், இந்த உடைகள் உடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி தூக்கத்தை பாதிக்கும். இதனால், தூக்கமின்மை, தூக்கத்தில் அடிக்கடி விழித்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

இறுக்கமான உடைகள் சருமத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி அரிப்பு, சிவந்து போதல் மற்றும் பிற தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது உடல் வெப்பநிலையை அதிகரித்து வியர்வையை ஏற்படுத்தி அசௌவுகரியத்தை உண்டாக்கும்.‌ 

இத்தகைய உடைகள் செரிமானத்தை பாதித்து, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இறுக்கமான உடைகள் நரம்பு மண்டலத்தை பாதித்து, பதட்டம், கவலை, மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும், இவை தசை வலியை அதிகரித்து உடல் செயல்பாட்டை வெகுவாகக் குறைக்கும்.‌ 

எந்த உடைகளை அணிவது? 

இரவில் தூங்கும்போது பருத்தி துணி உடுத்தி தூங்குவது சருமத்திற்கு மிகவும் இதமாக இருக்கும். இது வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால், உடலை என்றும் கதகதப்பாக வைத்திருக்கும். 

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் எந்த வித வண்ணங்களில் உடை அணிந்தால் இதமாக இருக்கும் தெரியுமா?
sleep in tight clothes

இறுக்கமான உடைகளுக்கு பதிலாக லூஸ் ஃபீட் உடைகளை அணியுங்கள். இது உடலுக்கு போதுமான இடம் கொடுத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இரவில் தூங்கும் போது சரியான உரையை தேர்ந்தெடுத்து உடுத்துங்கள். இறுக்கமான உடைகளை அணிந்து தூங்குவது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். இது நம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். நல்ல தூக்கம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, தூங்கும்போது வசதியான உடைகளை அணிந்து நல்ல தூக்கத்தை பெறவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com