நாம் அனைவரும் தண்ணீர் மிகவும் முக்கியமானது என்பது தெரியும். ஆனால், தாகம் எடுக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிப்பது உண்மையில் நல்லதா? சிலர், தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள். மற்றவர்கள், தாகம் எடுக்கவில்லை என்றாலும், அடிக்கடி தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்கிறார்கள். இந்தப் பதிவில் தாகம் எடுக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் நன்மை, தீமைகள் குறித்து பார்க்கலாம்.
தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்:
தாகம் என்பது உடலில் நீர்ச்சத்து குறைந்துவிட்டதற்கான ஒரு அறிகுறி. தாகம் எடுக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம், உடலில் நீர்ச்சத்து எப்போதும் சரியான அளவில் இருக்கும். இது பல உடல் செயல்பாடுகளுக்கு அவசியம்.
தண்ணீர் குடிப்பது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. இது சருமம் சுருங்கி, வறண்டு போவதை தடுக்கிறது.
உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க தண்ணீர் மிகவும் முக்கியம். குறிப்பாக வெயில் காலங்களில், தண்ணீர் குடிப்பது உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது.
தண்ணீர் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது. மேலும் இது அளவுக்கு அதிகமாக உணவு உண்ணும் ஆசையை குறைத்து, எடை இழப்புக்கு உதவுகிறது.
தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிப்பதன் தீமைகள்
அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது நீர் விஷத்திற்கு வழிவகுக்கும். இது உடலில் சோடியம் அளவு குறைந்து, மூளை செயல்பாடு பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமையும்.
அதிக அளவு தண்ணீர் குடிப்பது இதயத்தில் சுமையை அதிகரித்து, இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
தண்ணீர் அதிகமாக குடிப்பது சிறுநீரகத்தில் அதிக சுமையை ஏற்படுத்தி, சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
உடலுக்குத் தேவையான தண்ணீரின் அளவு நபருக்கு நபர் வேறுபடும். உங்கள் உடல் செயல்பாடு, காலநிலை, உடல்நிலை போன்ற காரணிகள் இதனை பாதிக்கும். பொதுவாக, ஒரு நாளைக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது.
தாகம் எடுக்காமல் அடிக்கடி தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதுதான். ஆனால், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, உங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை, சரியான நேரத்தில் குடிப்பது முக்கியம். பொதுவாக 20 கிலோ உடல் எடைக்கு 1 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படியானால், உங்களது உடல் எடையின் அடிப்படையில் தினசரி நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்து குடிக்கவும்.