ஒரே வாரத்தில் உடல் எடை குறைப்பது சாத்தியமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

Lose Weight in One Week
Is It Possible to Lose Weight in One Week?

இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது பலருடைய இலக்காக இருந்து வருகிறது. குறிப்பாக, யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பல காணொளிகளைப் பார்த்து, ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைக்க பலர் முயல்கின்றனர். அத்தகைய காணோளிகளில் சொல்லுவதுபோல ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைக்க முடியுமா? அது ஆரோக்கியமான அணுகுமுறையா? என்பதை இப்பதிவில் பார்க்கலாம். 

ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைப்பது சாத்தியமானதுதான் என்றாலும், அதில் உள்ள விளைவுகள் மற்றும் அபாயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீண்டகாலம் உடல் எடையை கட்டுப்படுத்தவும், நமது ஒட்டு மொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் படிப்படியான உடல் எடை குறைப்பு முறைகளையே நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதையும் மீறி நீங்கள் ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தால், சில விளைவுகளை சந்திக்க நேரிடலாம். 

நீரிழப்பு Vs கொழுப்பு இழப்பு: நீங்கள் ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைக்கும்போது கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பீர்கள். அதே நேரம் அதிகப்படியான உடற்பயிற்சி செய்யும்போது உங்களது உடல் எடை குறையலாம். இது பெரும்பாலும் உடலில் உள்ள கொழுப்பு குறைவதைவிட நீரின் எடை குறையவே காரணமாகும். இத்தகைய நீரிழப்பு மூலமாக ஏற்படும் எடை இழப்பு தற்காலிகமானது. எனவே உடலில் உள்ள கொழுப்பின் எடையைக் குறைக்க முற்பட வேண்டும். 

கலோரி பற்றாக்குறை: உங்களது உடல் எடையைக் குறைக்க உடலில் உள்ள கலோரிகளை எரிப்பதற்கு பதிலாக குறைவாக கலோரிகளை உட்கொள்ளும்போது உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படலாம். எனவே ஒரு வாரம் முழுவதும் நீங்கள் குறைவாக உட்கொள்ளும் உணவால், எடை குறைப்பு ஏற்பட்டாலும் அது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுத்து ஆபத்தை விளைவிக்கலாம். 

தசை இழப்பு: விரைவான எடை இழப்பை இலக்காகக் கொண்டு நீங்கள் முயற்சிகளை மேற்கொண்டால், அது உங்களது தசை இழப்புக்கு வழிவகுக்கும். எனவே உங்களது வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, நீண்ட காலத்திற்கு உங்களது எடையைப் பராமரிப்பதைக் கடினமாக்கும். 

உளவியல் தாக்கம்: விரைவான எடை இழப்பு முறைகள் மனரீதியாக உங்களை பாதிக்கும். தீவிர உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை உங்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி மோசமான உணர்வுகளுக்கு வழிவகுக்கும். எனவே எந்த ஒரு உடல் எடை பராமரிப்பு விஷயங்களை முயற்சித்தாலும் மன நலனுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். 

இதையும் படியுங்கள்:
முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் நபரா நீங்கள்? அச்சச்சோ! 
Lose Weight in One Week

ஒரு வாரத்தில் உடல் எடையைக் குறைக்க முடியும் என்றாலும், அது தற்காலிகமானது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, நிலையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் அணுகுமுறைகளை முயற்சித்து, ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க முயல்வது நல்லது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com